Wednesday, September 27, 2023

.

 தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (26/09/2023)  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர்களை சந்திப்பதற்காக நாள் மற்றும் நேரம் ஒதுக்குமாறு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.


 முதலமைச்சரின் செயலாளர்கள் - III & IV ஆகியோர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

  மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமிகு.தங்கம்தென்னரசு அவர்களையும் சந்தித்து நமது கூட்டமைப்பின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழங்கி,விரைவில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றிட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக  கூட்டமைப்பின் சார்பிலும் நடவடிக்கைகளை துவங்கியிருக்கின்றோம் என்பதையும் இதன் மூலம் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்,

த.அமிர்தகுமார்,

முனைவர்.செ. பீட்டர் அந்தோணிசாமி,

மாநில தலைமை 

ஒருங்கிணைப்பாளர்கள்,

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,

மாநில நிதிக்காப்பாளர் மற்றும்

மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள்,

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும்  உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

மாநில மையம்.






No comments:

Post a Comment