பதவி உயர்வு பெற்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பொறுப்பேற்கும் ஆசிரியர்களுக்கு எவ்வாறு இம்மாதம் ஊதியம் தயார் செய்வது ?
1. தேதி 21 ஆகின்றது. பள்ளிகளில் பட்டியலை தயார் செய்து கருவூலத்திற்கு அனுப்பி இருப்பார்கள். அவ்வாறு அனுப்பி இருந்தால் பட்டியலை audit செய்ய சொல்லி, பதவி உயர்வு பெற்றவர்களை *remove from current pay roll * என்று கொடுத்துவிட்டு promotion panel entry மற்றும் promotion cum posting, relieving entry கொடுக்கப்பட வேண்டும்.
2. Joining entry புதிய அலுவலகத்தில் கொடுக்கப்பட்டவுடன் Transit pay entry மற்றும் pay fixation செய்யப்பட வேண்டும்.
3. Pay fixation செய்யப்படுவதற்கு முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து ஆணை பெற்ற பிறகு தான் பட்டியல் தயார் செய்ய முடியும். அதுவரையில் முதுகலை ஆசிரியர் பதவியிலேயே ஊதியம் பெறுகின்றார் எனில் joining entry மற்றும் Transit period entry கொடுத்துவிட்டு பட்டியல் தயார் செய்யவும்.
4. புதிய அலுவலகத்தில் பில் குரூப்பில் add செய்யப்படும் பொழுது எந்த தேதியில் பணியாற்றாரோ அந்தத் தேதியில் add செய்யப்பட வேண்டும்.
5. *இவர்களுக்கு தனியாக பில் குரூப் create செய்வதும் அல்லது ஏற்கனவே ஏதாவது தனியாக ஒரு பில் குரூப் இருந்தாலும் அதில் add செய்வதும் கூடாது இவர்கள் எந்த பட்டியலில் சேர்க்க வேண்டுமா அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு பட்டியல் தயார் செய்திருந்தாலும் அதே பட்டியலில் சேர்க்க வேண்டும்.*
6. Bill group இல் add செய்தவுடன் result இல் வர மாட்டார்கள். Schedule run இன்று கொடுத்தால் ஓரிரு நாட்களில் வந்து விடுவார்கள். இதன் பிறகு அனைத்து பணியாளர்களுடன் சேர்ந்து இவர்களுக்கு பட்டியல் தயார் செய்யலாம் அல்லது இவருக்கு மட்டும் தனியாக பட்டியல் அனுப்பலாம்.
7. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று வரும்பொழுது PP 2000 ரூபாய் பெற்று இருப்பார்கள் அது தற்பொழுது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி ஏற்றவுடன் கிடையாது. ஆகவே element entry delete இல் சென்று எந்த தேதியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்றார்களோ அந்த தேதி வரை end date கொடுத்து personal pay element delete செய்து கொள்ள வேண்டும்.🏹vj🏹
8. Transit period entry கொடுக்கப்படும் பொழுது பழைய அலுவலகத்திற்கும் புதிய அலுவலகத்திற்கும் உண்டான ஊதியம் சரியாக பிரிந்து வரும். HRA இரண்டு அலுவலகங்களுக்கும் ஒன்று எனில் பிரச்சனை இல்லை. HRA மாறி இருந்தால் HRA split entry கொடுத்து பட்டியல் தயார் செய்யவும்.
9.உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர்களுக்கு ஏற்கனவே DSC dongle கையில் இருக்கும் அதையே தற்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளலாம் எவ்வித பிரச்சனையும் இதில் ஏற்படாது ..பிரச்சனையும் இல்லை.
10.முதுகலை ஆசிரியராக இருந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்றவர்கள் நேரடியாக மாவட்ட கருவூலத்திற்கு சென்று 1. Passport size photo, 2. Promotion order 3. Aadhar card colour Xerox 4. Pan card colour Xerox 5. IFHRMS employee id இவற்றினை AP ( assistant programmer) ஆக உள்ளவரிடம் கொடுத்தால் இரண்டு நாட்களில் உங்களுக்கு DSC signature வழங்கி விடுவார்கள். இதற்கு அரசுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.🏹vj🏹
11.அதன் பிறகு அனைவருக்கும் பட்டியலை கருவூலத்திற்கு அனுப்பலாம். ஒருவேளை தலைமை ஆசிரியர் வருவதற்கு முன்பு தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர்கள் மூலமாக கருவூலத்திற்கு பட்டியல் அனுப்பி இருந்தால் no problem கருவூலத்திற்கு தபால் ஒன்றினை வழங்கிவிட்டு MTC 70 புதிதாக பணியாற்ற தலைமை ஆசிரியர் கையொப்பம் விடலாம்.
12. காலையில் பணி விடுவிப்பு செய்து காலையிலேயே பணியாற்றவர்களுக்கு Transit period no என்று கொடுக்கவும். காலையில் பணி விடுவிப்பு செய்து மாலையில் பணியாற்றவர்களுக்கு
ஒரு நாள் Transit pay கொடுக்கப்பட வேண்டும். மாலையில் பணி விடுவிப்பு செய்து அடுத்த நாள் காலையில் பணியாற்றவர்களுக்கு Transit period no என்று கொடுக்கவும்.
13. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்றவர்கள் option கொடுக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய Level 18 இருந்து Level 23 க்கு உரிய வித்தியாசத்தொகையினை நிலுவைத் தொகையாக பெற்றுக் கொள்ளலாம். அதாவது ( Grade pay difference போன்றது புரிதலுக்காக)
*கவனிக்க வேண்டியவை* Promotion entry தான் போட வேண்டும். Transfer entry கொடுத்து transfer செய்யக்கூடாது.
பட்டியலை கருவூலத்திற்கு அனுப்பவில்லை தயார் செய்து மட்டும் பட்டியல் draft உள்ளது எனில் பட்டியலை கேன்சல் செய்துவிட்டு மேலே சொன்ன போன்று செய்யவும்.🏹vj🏹
No comments:
Post a Comment