எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்றடைந்தது குறித்து மூன்றாம் நபர் மதிப்பீடு ( Third Party evaluation ) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் , இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் ( B.Ed. ) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளதால் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வியியல் ஆண்டு ( B.Ed ) கல்லூரிகளில் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்களை Third Party evaluation பணியில் மதிப்பீட்டாளராக ( Enumerators ) செயல்பட அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இம்மாணவர்களுக்கு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சி அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 28.08.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. பள்ளிகளில் Field investigation பணியானது 01.09.2023 முதல் 15.09.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment