Thursday, August 17, 2023

An Appeal

 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின் உருவாகும் PG காலிப் பணியிடங்களுக்கு துணை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை !!!


மதிப்புமிகு இயக்குநர் அவர்களுக்கு,

பொருள் : மேல்நிலைக்கல்வி- தலைமை ஆசிரியர் பதவி உயர்வால் ஏற்படும் காலிப் பணியிடங்களை துணை பொது மாறுதல் கலந்தாய்வு மூலமும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு மூலமும் நிரப்பிட வேண்டுதல் சார்பு

 வணக்கம். 

தற்போது மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகளுக்கு, பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கலந்தாய்வு நடைபெற்றபின் உருவாகும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கிற காலி பணியிடங்களுக்கும் உடனடியாக துணை பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்போதுதான் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி பாதிப்படையாமல் இருக்கும். மேலும் வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்குப் பணிமாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் முதுகலை ஆசிரியர்களுக்கு நல்வாய்ப்பாகவும் இருக்கும். ஆகவே பதவி உயர்வு கலந்தாய்வு நிறைவு பெற்றவுடன் முதுகலை ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கோருகிறேன் நன்றி.   



மு. கந்தசாமி, 

பொதுச்செயலாளர், 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

No comments:

Post a Comment