Sunday, July 30, 2023

பழனி வட்டார செய்திகள்

 குரு வணக்கம் நிகழ்ச்சி 

அனைவருக்கும் வணக்கம். இன்று (30.07.2023) பழனி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ,பழனி கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் குரு வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி வந்தனத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், திரு. அம்பி (எ) இராமகிருஷ்ணன் தலைமை தாங்கி வழிகாட்டினார். பழனி மின்வாரிய துணைப் பொறியாளர் திரு. மாரியப்பன், விவேகானந்தா பள்ளி முதல்வர் திரு.காசி ஆறுமுகம், முன்னாள் திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கு.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர் திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் குருவின் பெருமை,நிகழ்ச்சியின் நோக்கம், மாதா - பிதா - குரு - தெய்வம் ஆகியோர் ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறப்பினை வழங்க வகிக்கும் பங்கு, வியாசர் அருளிய மகாபாரதம், வால்மீகி அருளிய இராமாயணம் ஆகியவை மனித சமுதாயத்தை உய்ய வைப்பதற்காக கூறும் மாண்புகள் ,வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியன குறித்து சிறப்புரையாற்றினார். தேசிய ஆசிரியர் சங்க பழனி பகுதி மகளிர் அணிச் செயலாளர் திருமதி. மல்லிகா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி சங்கத்தின் கட்டமைப்பு,நோக்கம், பணிகள் முதலிய குறித்து எடுத்துரைத்தார். திரு. இரவிச்சந்திரன் ஆசிரியர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். மாவட்டப் பொருளாளர் திரு. மணிகண்டன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவில் ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர், பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோர் 50 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவவச் செல்வங்கள் கணேஷினி,! கைலாஷினி ஆகியோர் குரு வணக்கப் பாடல் பாடி சிறப்பித்தனர்.

நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.








No comments:

Post a Comment