Saturday, March 4, 2023

SC / ST Students Scholarship New Website

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைக் கான இணையதளம் https://tnadtwscholarship.tn.gov.in/ இந்தாண்டு ஜன.30ல் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


விதிமுறைகளின்படி நடப்பு கல்வியாண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஜாதி சான்று, வருமானச் சான்று, ஆதாருடன்

 இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரி பார்க்கப்படும்.


இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக 'வீடியோ' வெளியிடப்பட்டு உள்ளது.


இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 https://tnadtwscholarship.tn.gov.in/


TO READ ALL NEWS  - CLICK HERE


No comments:

Post a Comment