Thursday, January 26, 2023

IT Informations 2023 - Useful for Teachers and Govt Staff

PENSION SCHEMES


SECTION 80 C :


GPF/TPF சந்தாரார்கள் தங்கள் ஓய்வூதியச் சந்தா தொகையை 80 கீழ் ரூ 1,50,000/- வரை கழிக்கலாம்.


SECTION 80CCD(1):


ஓய்வூதியத்திற்கான பங்களிப்பில் 
ஊழியர்கள் தனது ஊதியத்தில் 10% வரை கழிக்கலாம்.


 SECTION 80CCD(1B):


புதிய ஓய்வூதியத் திட்டம் / அடல் பென்சன் திட்டத்தில் செலுத்தப்பட்ட  தொகையில்  அதிகபட்சம் ரூ 50,000/- வரை கழிக்கலாம்.


GPF சந்தாரார்கள் அடல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அதில் செலுத்தப்பட்ட தொகையில்  அதிகபட்சம் ரூ 50,000/- வரை  கழிக்கலாம்.


மேற்கண்ட பிரிவுகளின் மூலம் CPS/NPS/GPF சந்தாரார்கள் SECTIONS  80C+80CCD(1)+80CCD(1B) ரூ 2,00,000/-   வரை வருமானவரி கழிவு பெறலாம்.


SECTION 80CCD(2) :


ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அரசு / தனியார் நிறுவனங்கள் அளிக்கும் பங்குத் தொகை.


இது ஊழியர்களின் சமபளத்தில் 14% வரை இருக்கலாம்.


இக்கழிவை முழுமையாக கழித்துக் கொள்ளலாம்.


அரசின் பங்குத் தொகையை வருமானத்தில்காண்பித்து அதன் பின்னர் தான் SECTION 80CCD(2) - ல் கழித்துக் கொள்ள வேண்டும். 



HOUSING LOANS

SECTION 24B- 80C- 80EEA

SECTION 24 B :


கட்டிமுடிக்கப்பட்ட வீட்டின் மீதான வீட்டுக் கடனிற்கான வட்டியில் தனிநபர் சொந்தப் பயன்பாட்டிற்கு எனில் ரூ 2,00,000/- வரையும் வாடகைக்கான வீடு எனில் முழுமையான வட்டியும்  SECTION 24 B -ல் கழிக்கலாம்.

SECTION 80C :


கடன் தொகையில் அசல் தொகையை 
SECTION 80C - யின் கீழ் 1,50,000/- க்குள் கழிக்கலாம். 
5 ஆண்டுகளுக்குள் வீட்டை விற்றால் கழிக்கப்பட்ட அசலுக்கான வரியைச் செலுத்த் நேரிடும். இருவர் பெயரிலான சொத்து எனில்  இருவருமே SECTION 24B மற்றும்  80 C  - ல் மேற்கூறிய உச்சவரம்புத் தொகைவரை கழிக்கலாம். 

 
SECTION 80EEA :


வீடு வரி செல்லுத்துவோரின் பெயரிலான முதல் சொத்து  எனில் வட்டித் தொகையில் கூடுதலாக ரூ 1,50,000/- SECTION 80EEA  -ன் கீழ் கழிக்கலாம்.


CLICK HERE TO KNOW ABOUT OTHER SECTIONS 


தேசிய அசிரியர் குரல் அச்சுப்பதிப்பில்

 தங்கள் பள்ளி / கல்லூரி / நிறுவனத்தின் 

விளம்பரம் இடம் பெற உடன் 

தொடர்புகொள்ளவும் : 9786795104








No comments:

Post a Comment