"TET நிபந்தனைகளுக்கும் 16/11/2012க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கும் சம்மந்தமே இல்லை" - முதலமைச்சரின் கருணை மட்டுமே தீர்வு.
RTE சட்டமானது, இந்தியாவில் 23/8/2010 ல் அமலாக்கம் பெற்று இருந்தாலும், 181 ஆவது அரசாணை 15/11/2011ல் வெளிவந்திருந்தாலும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான தெளிவான செயலாக்கங்கள், அதுவும் குறிப்பாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தமிழகத்தில் தெளிவற்று இருந்தது. 16/11/2012 க்கு முன்பு வரை, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், 2010 கல்வி மானியக் கோரிக்கையின் போது மொழியப்பட்ட நடைமுறையிகளின் படியே ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.
16/11/2012 க்கு முன்பே, TET கட்டாயம் என்பதை முறையாக தமிழக DEO, CEO க்கள் மற்றும் பள்ளி செயலாளர்களுக்கு முறைப்படி தெரிவிக்காதமையாலேயே அன்றைய காலகட்டத்தில் சுமார் 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர்.
பணி நியமனம் பெற்று பல மாதங்களுக்கு பின்னர் முன் தேதியிட்ட செயல்முறைகள் மூலமாக கடந்த ஆட்சியாளர்கள் TET நிபந்தனைகளில் இந்த 1500 ஆசிரியர்களைக் கொண்டு வந்தனர்.
இதே காலகட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் 10000 பேர், மைனாரிட்டி பள்ளி ஆசிரியர்கள் சுமார் 500 பேர், ஆசிரியரல்லாமல் பணி நியமனம் பெற்று பின்னர் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு TET கட்டாயமா அல்லது விலக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தெளிவான அரசாணைகள் இன்றுவரை ஏதுமில்லை.
ஆகவே
அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 11 வருடங்களாக TET நிபந்தனைகளாக மிக வேதனையுடன் கல்விப் பணி புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, TET லிருந்து விலக்கு என்ற ஒரு தவிர்ப்பு ஆணை மட்டுமே தீர்வு.
பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நிறைவு பெறும் வயதை தொடும் சூழலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்து, மாண்புமிகு கல்வியமைச்சர், கல்வித் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட பலரிடமும் பலமுறை பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
இது போன்ற சிக்கல்களுக்கு
விரைவில் தீர்வு எட்டப்படும் என பதில்கள் கடந்த ஒருவருட காலங்களாக உயர் அதிகாரிகள் கொடுத்தாலும், தீர்வு மட்டும் இன்று வரை கிணற்றில் விழுந்த கல் போலவே உள்ளது. ஆகவே, எளிதில் தீர்க்க இயலும் இந்த சிக்கலுக்கு தமிழக முதலமைச்சர் கருணையுடன் விரைந்து தீர்வு காண வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment