Saturday, April 9, 2022

ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை

 ஸ்ரீ கோதண்டராமர் கோயில்

 வொண்டிமிட்டா 

கடப்பா மாவட்டம்

 ஆந்திர மாநிலம்


“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)








 




கோதண்டராமர் கோயில் (Kodandarama Temple) ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை வட்டத்திலுள்ள வொண்டிமிட்டா (Vontimitta)என்னுமிடத்தில் அமைந்துள்ள  இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும்விஜயநகரக் கட்டிடக்கலை பாணியின் உதாரணமான இந்த கோயில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியிலுள்ள மிகப்பெரிய கோயிலான இது கடப்பாவிலிருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.கோயிலும் அதன் அருகிலுள்ள கட்டிடங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.உள்ளூர் புராணத்தின் படி, இந்த கோயில் நிஷாத (போயா) வம்சத்தைச் சேர்ந்த வொண்டுடு - மிட்டுடு என்ற இருவரால் கட்டப்பட்டது. கொள்ளையர்களாக இருந்த இவர்கள் பின்னர், இராமனின் பகதர்களாக மாறி இக்கோயிலை கட்டியதாக ஒரு கதை கூறப்படுகிறது.இந்தக் கோயில் 16 - ஆம் நூற்றாண்டில் சோழர்களாலும்விஜயநக மன்னர்களின் காலத்திலும் கட்டப்பட்டது.

கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் (TTD) ஆந்திர அரசு ஒப்படைத்துள்ளது. கோயிலை அதன் நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வாரியம் 29 ஜூலை 2015 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.இராமனின் பிறந்த நாளான இராம நவமி, தெலங்காணாவுக்குப் பிரிந்து சென்ற பத்ராச்சலம் கோயிலில் ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாடி வந்தது. தற்போது வொண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில் 2015 ஆம் ஆண்டிலிருந்து  கொண்டாட்டங்களின் மாற்று இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.


வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்

தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்

வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்

நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்

தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.

ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்

தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்

கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்

திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.

(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)





No comments:

Post a Comment