Monday, February 7, 2022

திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள்

05.02.2022 வசந்த பஞ்சமி நன்னாளில் திருச்சி மாவட்ட கடமை உணர்வு நாள் மற்றும் திருச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க  துவக்க. மற்றும் நிர்வாகிககள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்த்தில் 19 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து திருமதி. ஜெயலலிதா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து திருவாளர்கள்  விராலிமலை ஆர் இராஜகோபாலன், முத்துக்குமார், மாநில இணைச் செயலாளர் திரு. இராகவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திரு.இராகவன் அவர்கள் சங்கம் குறித்த உரை நிகழ்த்திளார். விராலிமலை ஆர் இராஜகோபாலன் அவர்கள் கடமை  உணர்வு  நாள் உரை நிகழ்த்தினார்.அனைவரது ஒருமித்த கருத்துடன் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநிலத் தலைவர் திரு.திரிலோசந்திரன், துணைத் தலைவர் திரு.விஜய் அவர்கள் காணொலி வழியாக வாழ்த்துரை வழங்கினர். மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி  நிர்வாகிகளைத் தேர்வு செய்து அனைவரின் ஒப்புதலோடும் அறிவித்தார். மாட்டத் தவைலர் திரு.முரளி,செயலளர் திரு.ஆறுமுகம், மகளிர் அணிச் செயலாளர் திருமதி. மல்லிகா ஆகியோர் ககூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.







No comments:

Post a Comment