26.01.2022 மாலை, பழனி கல்வி மாவட்டத்தில் நடைபெற்ற கடமை உணர்வு நாள் நிகழ்ச்சியில், VHP மாநில அமைப்புச் செயலாளர் திருமிகு. சேதுராமன் அவர்கள் ஆசிரியருக்கான கடமைகள் என்னும் தலைப்பில் ஆசிரியருக்கான தேசியக் கடமை, கல்வி வழங்குதல் மற்றும் மாணவர் வாழ்வை வளப்படுத்தி மேன்மையடையச் செய்தல், நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான கடமை , நம் பண்டைய பாரதத்தின் அறிவுச் செல்வத்தை எதிர்கால சமுதாயத்திற்க்கு கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் ஆகியவற்றைக் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முதலாவதாக மதுரை ளிபாக் சங்கசாலக், சேவாபாரதி தலைவர் ஆசிரியர் அம்பி (எ) இராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கினார். தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் திரு. விஜய் அவர்கள் சங்கத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். திண்டுக்கல் மாவட்டத் தலைவர் திருமதி. வைரமணி முன்னிலை வகித்தார். ,பழனி கல்வி மாவட்டத் தலைவர் திருமதி. ஜான்சிராணி வரவேற்புரை வழங்கினார். மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சாருமதிதேவி வாழ்த்துரை வழங்கினார். திரு. ராஜவேல் நன்றியுரை வழங்கினார். திரு. பிரேம் ஆனந்த் அவர்க ள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.திரளான ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment