Tuesday, December 14, 2021

திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேசிய ஆசிரியர் சங்கம் (திருப்பூர் மாவட்டம்) சார்பில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் CDS பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 இராணுவ வீரர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் நிகழ்வு இன்று (14.12.2021) வாலிபாளையத்திலுள்ள தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் திரு.பழனிச்சாமி அவர்கள் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.முரளி முன்னிலை வகித்தார். மேஜர் திரு.பிபின் ராவத் அவரின் வரலாற்றையும், அவரது சிறப்புகளையும் திரு.பழனிச்சாமி அவர்கள் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர். இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் திரு.தண்டபாணி, மாவட்டப் பொருளாளர் திரு.பிரபு, மாவட்டத் துணைச் செயலாளர் திரு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் திரு.இராமகிருஷ்ணன், திருப்பூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment