இந்தியாவில், தேசிய கணித தினம் (National Mathematics Day) டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது வாழ்வில் நடைப்பெற்ற சில முக்கிய நிகழ்வுகள் :
22.12.1887 - ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் சீனிவாச இராமானுசன் பிறந்தார்.
1892-ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார்.
1897- ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.
12-வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார்.
1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றார்.
1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.
மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார்.
1913 ஜனவரியில் பேராசிரியர் சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர்.
1914 - ஆம் ஆண்டு இராமானுஜன் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார்.
அங்கு இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை ஆகும்.
1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.
26.04.1920 - காசநோயால் பாதிக்கப்பட்ட சீனிவாச இராமானுசன் இறந்தார்.
2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் நகரில் இராமானுசன் கணிதப் பூங்கா என்ற அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
"1729" - இராமனுஜன் - ஹார்டி எண் என அழைக்கப்படுகிறது.
இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுச் சென்றவை:
• மூன்று நோட்புக்குகள்.
• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913–1914).
• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்.1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்.
தொகுப்பு
வா.ஸ்ரீராம்
கணித ஆசிரியர்
தேசிய ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு.
மிகச்சிறந்த தகவல் கொண்ட பதிவு
ReplyDeleteVery useful and informative...
ReplyDelete