இன்று (15.10.1931) இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பதவி வகித்த டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் . நாட்டின் குடியரசுத் தலைவர், அறிவியலாளர், ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து, திருச்சி கல்லூரியில் இயற்பியலும், சென்னை எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியலும் பயின்றவர்.
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் பொறியாளராக பணியாற்றினார். இவரது முயற்சியால் 1980ஆம் ஆண்டு எஸ்.எல்.வி -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் பெரும்பங்காற்றியவர் அப்துல் கலாம். மொத்தம் 5 ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். 2002ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்.
பத்ம விபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட 14 விருதுகளை கலாம் பெற்றுள்ளார்..!!
No comments:
Post a Comment