புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க கிளை துவக்க விழா விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24-10-2021 இன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்வி மாவட்ட தலைவர் திரு இரா.செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு இர.திருஞான குகன், இணைச்செயலாளர் திரு சி.ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கல்வி மாவட்ட செயலாளர் திரு மு.மலையரசன் அனைவரையும் வரவேற்றார் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி சங்க நோக்கங்கள் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து கிளையினை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கோட்ட செயலாளர் திரு ஶ்ரீ ஹரி , இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் கல்வி மாவட்ட பொருளாளர் திரு முத்துசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விராலிமலை திரு ஆர்.ராஜகோபாலன் சிறப்பாக செய்தருந்தார்.
No comments:
Post a Comment