Sunday, September 19, 2021

Central Teacher Eligibility Test (CTET) - மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு !!!

 மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை டிசம்பர் 16 முதல் ஜனவரி 13ம் தேதிக்குள் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.  இது குறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: 


மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 20 மொழிகளில் நடக்கும் இந்த தேர்வு, கணினி வழியாக நடத்தப்படும். தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டங்கள், மொழிகள், தகுதி வரம்பு, தேர்வு கட்டணம், தேர்வு மையம், முக்கிய தேதிகள் ஆகிய விவரங்கள், மத்திய தகுதி தேர்வு இணையதளமான https://ctet.nic.in/-ல் 20/09/2021 முதல் பதிவேற்றப்படும்.


தேர்வு எழுதுவோர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் அக்டோபர் 19ம் தேதி வரை ஏற்கப்படும். தேர்வு கட்டணத்தை அக்டோபர் 20-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 19 நகரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 16 முதல் 2022 ஜனவரி 13 வரை கணினி மூலம் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


CTET INFORMATION BROUCHERE - CLICK HERE

CTET DEC 21 EXAM APPLY - CLICK HERE

No comments:

Post a Comment