தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பாக 03/08/2021 அன்று (செவ்வாய் கிழமை) தருமபுரி பச்சமுத்து மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் குருவின் பெருமையைப்போற்றும் வகையில் குரு வணக்கம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாகக் நிகழ்த்தப்பட்டது.
சங்க மாநில துணைத்தலைவர் திரு. முருகன் அய்யா அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்.இவ்விழாவானது தருமபுரி கல்விமாவட்ட அலுவலர் அய்யா திரு. R. பாலசுப்பிரமணி அவர்களால் குத்து விளக்கேற்றி விழா சிறப்பாக தொடங்கப்பட்டது..
தேசிய ஆசிரியர் சங்க தருமபுரி மாவட்டத்தலைவர் திரு. சி துரைசாமி அவர்கள் வரவேற்புரையும்,திருவண்ணாமலை பாரத அறநெறி பண்பாட்டு மைய மாநிலப்பொறுப்பாளர் மரியாதைக்குரிய ஸ்ரீ. சூரியநாராயணன் அவர்கள் கற்பிக்கப்படும் கல்வி முறை மற்றும் குருவின் பெருமைகள் பற்றி கூறி சிறப்பான ஆசியுரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அரூர் கல்விமாவட்ட அலுவலர் மரியாதைக்குரிய திரு.பொன்முடி அய்யா அவர்களும்,
தருமபுரி கல்வி மாவட்ட அலுவலர் மரியாதைக்குரிய திரு. பாலசுப்பிரமணி அய்யா அவர்களும், பாலக்கோடு கல்வி மாவட்ட அலுவலர் மரியாதைக்குரிய திரு. சண்முகவேல் அய்யா அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.இலளிகம் தலைமையாசிரியர் திரு. சீனிவாசன் அய்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியப் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .
விழா இறுதி நிகழ்வாக தேசிய அசிரியர் சங்கம் சேலம் கோட்டம் ஊடகப் பொறுப்பாளர் திரு.N. குமார் அவர்களின் நன்றி உரையுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.
No comments:
Post a Comment