Sunday, August 1, 2021

பழனியில் குரு வணக்கம் நிகழ்வு

தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு   சார்பாக 31.07.2021 அன்று பழனி மேற்குரதவீதி ஸ்ரீ பாலமுருகன் நர்சரி & பிரைமரி பள்ளியில் பழனி கல்வி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க குரு வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.திரு.சந்தானம் ஆசிரியர் சரஸ்வதி வந்தனம் பாட, விழாத் தலைவர் குத்து விளக்கேற்ற, குருபூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. திரு.M.அம்பி (எ) இராகிருஷ்ணன், ஆசிரியர் பணி நிறைவு மற்றும் திண்டுக்கல் மாவட்ட சேவாபாரதி தலைவர் தலைமை தாங்கி உரையாற்றினார். திருமதி. வைரமணி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முன்னிலை வகித்தார்.பழனி கல்வி மாவட்டத் தலைவர்  திருமதி.தேவிஜான்சிராணி வரவேற்புரை வழங்கினார். திருமதி.சாருமதிதேவி,மாநில மகளிர் அணிச் செயலாளர், திரு.ராஜபாண்டியன், மாவட்ட துணைத் தலைவர், திரு.வெங்கடசுப்ரமணியம், தாளாளர்.ஸ்ரீ பாலமுருகன் நர்சரி & பிரைமரிபள்ளி ,  திருமதி.விஜயகல்யாணி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


      திரு.சந்திரசேகர், சேவாபாரதி, அவர்கள் குருவின் மேன்மை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் திரு.விஜய் சங்கத்தின் சேவைப் பணிகள் குறித்து உரையாற்றினார்.திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் திரு.மணிகண்டன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.தேசிய கீதம் மற்றும் நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.இந்நிகழ்ச்சியில் சுமார் 40 ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

விழா அழைப்பிதழ் - CLICK HERE






















No comments:

Post a Comment