Friday, July 30, 2021

மதுரை மாவட்ட செய்திகள்

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு - மதுரை மாவட்டத்தின் சார்பாக 'குருபூர்ணிமா' நிகழ்வு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இந்துமதி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். சரஸ்வதி வந்தனத்துடன் துவங்கிய விழாவில் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டத் தலைவர் திரு.கணேசன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு தலைமை  ஏற்ற  பள்ளியின் தலைமை ஆசிரியர் 'குரு பூர்ணிமாவின் முக்கியதுவத்தை தலைமையுரையாக வழங்கினார் முன்னாள் தலைமை ஆசிரியை திருமதி. தமிழ்செல்வி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைத் தலைவர் திரு.விஜய் குருபூர்ணிமாவின் சிறப்புகளை சிறப்புரையாக வழங்க ஆசிரியை திருமதி. சிவகாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுப் பெற்றது.தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்ட செயலாளர் திரு .பரமசிவம் விழாவை ஒருங்கிணைத்து  தொகுத்து வழங்கினார். 25க்கு மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் விழாவில் பங்கேற்றனர்.

 

விழா இறுதியில் பள்ளிக்கு நினைவு பரிசும் கடம்ப மரம் கன்றும், பங்கேற்ற ஆசிரிய / ஆசிரியர் பெருமக்களுக்கு துளசி கன்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தால் வழங்கப்பட்டது.

 












No comments:

Post a Comment