24.07.2021 விழுப்புரத்தில்
குரு வணக்கம் நிகழ்ச்சி
இனிதே நடைப்பெற்றது
தேசிய ஆசிரியர் சங்கம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் இணைந்து குரு வணக்கம் நிகழ்ச்சி இராமகிருஷ்ண மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.தேசிய ஆசிரியர் சங்கம் விழுப்புரம் மாவட்ட தலைவர்
தி இளங்கோ அவர்கள் வரவேற்புரை மற்றும்
சங்கத்தின் நோக்கங்களை எடுத்துக்கூறினார்.
மாவட்டக்கல்வி அலுவலர்
திரு கோ.கிருஷ்ணன் தலைமைவகித்து உரையாற்றினார்.
செஞ்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை
அமைப்பாளர்
திரு பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.அன்னமங்கலம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
திரு நா முனுசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.இராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமிஜி
பரமசுகானந்த மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார்.
முன்னதாக சிவபுராணம் மற்றும் பஜனை நடைபெற்றது.நிறைவாக விழுப்புரம் கல்வி மாவட்ட தலைவர் சுந்தரவெங்கடேசன்
நன்றி கூறினார். 200 ஆசிரியபெருமக்கள்
கலந்துகொண்டனர்.
அழைப்பிதழ்
Teacher's Mutual Transfer Wiling Forms 2021
No comments:
Post a Comment