Wednesday, September 17, 2025

சேலம் மாவட்ட செய்திகள்!!!


தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாண்பமை உச்ச நீதிமன்றத்தால் 01.09.25  அன்று டெட் தேர்வு சார்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள 1.79 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.  பாரத பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் வழியாக பாரத பிரதமருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு  சார்பாக கடிதம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

 


அகில இந்திய அளவில் இன்று, அனைத்து மாவட்டங்களிலும் நமது அகில இந்திய அமைப்பு ABRSM சார்பில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு TET தேர்வு பிரச்சினையிலிருந்து ஆசிரியர்களை காப்பாற்றவேண்டி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக இன்று (17.09.25) ஈரோடு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து TET தேர்விற்கு விலக்கு வேண்டி பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஆட்சியர் மூலமாகக் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் M.கந்தசாமி , மாநில பொருளாளர் திருஞான குகன் , மாவட்டத் தலைவர் மு. சண்முக ராஜூலு , மாவட்ட பொருளாளர் சு.ர.சுரேஷ் குமார் மகளிர் அணிச் செயலாளர் த.கிருத்திகா செந்தில்குமார் குணசேகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

NMMS SAT ENGLISH MEDIUM!!!

 SOCIAL - CLICK HERE 

SCIENCE - CLICK HERE 

அன்புகரங்கள் - தேவையான ஆவணங்கள்!!!

இரண்டு பெற்றோர்களையும் அல்லது ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இணைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் வழிமுறைகள்!!!

DOWNLOAD 



Paper News

 


Tuesday, September 16, 2025

சென்னை மாவட்ட செய்திகள்!!!

சென்னை மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக இன்று (16.09.25) மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவர்களை சந்தித்து TET தேர்விற்கு விலக்கு வேண்டி பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஆட்சியர் மூலமாகக் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சென்னை மாவட்ட தலைவர் மதிப்பு மிகு திரு. வே.சீனிவாசகன் . மாவட்ட இணை செயலாளர் திரு .தி.சிவா மற்றும் கோட்ட செயலாளர் திரு ம.ரா.இராமசந்திரகுமார் கலந்து கொண்டனர்.





NILP TRAINING ALL MODULES

 புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், : பள்ளி சாராக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி - தன்னார்வலர்களுக்கான பயிற்சி பாடக் கருத்துக்கள்...
NILP Training - All Modules - Download here

TET is mandatory to convert from BRTEs to BTs..* *W.P.No.7639/2023 வழக்கில்* *மாண்புமிகு தனி நீதியரசர்* *N. ஆனந்த வெங்கடேஷ்*அவர்கள் 19.08.2024 அன்று வழங்கிய தீர்ப்பில் BRTEs பணியில் உள்ளவர்கள் BT ஆக மாற TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். அதை எதிர்த்து அரசு தரப்பின் மேல்முறையீடு!!!(W.A.No.1456/2025)

 DOWNLOAD 

Paper News

 

Monday, September 15, 2025

மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!!!

 DOWNLOAD 

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 DOWNLOAD 

அகில இந்திய அளவில் இன்று, அனைத்து மாவட்டங்களிலும் நமது அகில இந்திய அமைப்பு சார்பில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் TET தேர்வு பிரச்சினையிலிருந்து ஆசிரியர்களை காப்பாற்றவேண்டி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக இன்று (15.09.25) மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து TET தேர்விற்கு விலக்கு வேண்டி பாரதப் பிரதமர் அவர்களுக்கு ஆட்சியர் மூலமாகக் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் M.K.திரிலோக சந்திரன், கோட்டச் செயலாளர் T.நீலமேகன், மாவட்டத் தலைவர் V.பரமசிவம், மாவட்டச் செயலாளர் K.கிருஷ்ணகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Friday, September 12, 2025

Pension Committee

 தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தும் கோரிக்கை மனுவானது, ஓய்வூதியக் குழுத் தலைவர் திரு. ககன் தீப் சிங் பேடி அவர்களிடம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு.ம. கோ.திரிலோக சந்திரன், மாநில பொதுச் செயலாளர் திரு மு. கந்தசாமி, மாநிலத் துணைத் தலைவர் திரு து .முருகன், சென்னை கோட்ட செயலாளர் திரு. ராமச்சந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரு மு. கந்தசாமி அவர்கள் பேசுகையில் இக்குழு காலநீட்டிப்பு எதுவும் கோராமல் உரிய காலத்தில் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் 01.04.2003 முதலே பழைய ஓய்வூதியத் திட்டத்தினை விரைவில் அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

DOWNLOAD 



TET வழக்கு தீர்ப்பு குறித்து மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதம்!!!

 CLICK HERE TO DOWNLOAD 



TET தேர்வு எழுத NOC தேவையில்லை... கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்!!!