Friday, June 19, 2026

தேனி மாவட்ட செய்திகள்!!!

 




TET தேர்வில் இருந்து 2011 ஆம் ஆண்டுக்கு முந்தைய நியமனம் பெற்ற ஆசிரியர் பெருமக்களுக்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை கடிதத்தை நமது மாண்புமிகு பாரத பிரதமர், மாண்புமிகு பாரத கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியவருக்கு அனுப்பும் விதமாக இன்று நமது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் இடம் அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம்!!!

 



திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கடிதம் வழங்கும் நிகழ்வில் மாவட்ட குழுவினர்.

Paper News

 



Thursday, June 18, 2026

திருவண்ணாமலை மாவட்டம்

 




விழுப்புரம் மாவட்டம்

 இன்று 18.06.2026 மாலை விழுப்புரம் மாவட்டத்தில் துணை ஆட்சியரை சந்தித்து ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது.





புதுக்கோட்டை மாவட்டம்

 இன்று 18.06.2026 (வியாழன்) அன்று நமது தேசிய ஆசிரியர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் மேலும் சங்க பிரதிநிதிகள் ஐந்து நபர்கள் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அம்மா அவர்களிடம் 2012 ஆம் ஆண்டிற்கு முன்பாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமாறு 

மனுவினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மூலமாக,நமது பாரத பிரதமர் அய்யா அவர்களுக்கும் மத்திய கல்வித்துறை மந்திரி அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது. 

திருச்சி மாவட்டம்

 அனைவருக்கும் வணக்கம்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (2009)

அமல்படுத்துவதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மூத்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எழுதுவதில் இருந்து முழு விலக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்

கோரி மாண்புமிகு பாரத பிரதமருக்கு திருச்சிராப்பள்ளி

மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக தேசிய ஆசிரியர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்

சார்பில் மனு அளிக்கப்பட்டது

           இங்ஙனம் 

திரு.நா. சாய் சுப்பிரமணியன்  

மாவட்டத் தலைவர்


திரு.ப.ஆறுமுகம் 

மாவட்ட செயலாளர் 

திரு.வெ.சோமு 

மாவட்ட பொருளாளர்





கோவை மாவட்டம்

 🔥🔥🔥🔥🔥*சிங்கப்பெண்கள் எங்கள் தங்க பெண்கள் கோவை மாவட்ட சாதனைப் பெண்கள்* 

🔥🔥🔥🔥🔥

தேசிய ஆசிரியர் சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சார்பாக இன்று மாலை 18/6/2026 - TET தொடர்பான தகுதி தேர்வை விலக்க கோரி தேசிய ஆசிரியர் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சருக்கும் பிரதம மந்திரிக்கும் கோரிக்கை மனு கடிதத்தை வழங்கினார்கள்.


🔥🔥🔥🔥🔥 

அது சமயம் கோவை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க பொருளாளர் திருமதி எஸ் இந்திராணி , மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி மணிமேகலை, திருமதி மாலா அன்னூர் ஒன்றியம், திருமதி ராணி கோவை நகர்ப்புற பொறுப்பாளர், திருமதி தனா ஆசிரியைகள் நிகழ்வில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் TET தகுதி தேர்வு விலக்கு வேண்டும் என்றும் 

மாநகராட்சி பள்ளிகளில் கடந்த மூன்று வருடங்களாக பொது மாறுதல் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை சிலவற்றையும் எடுத்துரைத்து வந்தனர் .


🔥🔥🔥🔥🔥

மேலும் இதில் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கூர்ந்து கவனித்து அதை தனி கவனத்தில் குறித்துக் கொண்டார் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


 இந்த நிகழ்வில் கலந்து கொண்ட *ஐந்து சிங்க பெண்களுக்கு* எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

💐💐💐💐💐


ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நானும் திரு தினேஷ்ம் வர இயலாத பொழுதில் கூட நிலைமையை குறித்த நேரத்தில் சரியாக செய்து சாதித்து வந்த ஐந்து ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்கி கொள்கிறேன்.

தங்கம் செய்யாததை நமது சங்கம் செய்யும் அப்படி சங்கத்தில் உள்ள சிங்கப்பெண்களுக்கு மிகப்பெரிய சல்யூட்.🫡🫡🫡🫡🫡

 நன்றி .


திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன் தலைவர் 

தேசிய ஆசிரியர் சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம்




சேலம் மாவட்டம்

 


நாமக்கல் மாவட்டம்

 இன்று மாலை 6 மணி அளவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு மாதேஸ்வரன் அவர்களை சந்தித்து மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் இது பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டி மனு அளித்தோம் அதை கனிவுடன் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் வரும் கூட்டத்தொடரில் நிச்சயமாக இது சார்ந்து கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்படும் எனவும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து அனைவரும் இணைந்து மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து நமது மனுவை வழங்குவதாகவும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க அனைத்து செயல்பாடுகளிலும் ஆதரவளிப்பதாக கனிவுடன் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட மூத்த ஆசிரியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு,TET தேர்வினால் பாதிக்கப்படும் மூத்த ஆசிரியர்கள் நாமக்கல் மாவட்டம்.



சென்னை மாவட்டம்

 சென்னை மாவட்டம் -

இன்று 18-06-2026 (வியாழக்கிழமை) 2012க்கு முன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 

*TET ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க* 

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டி *மாண்புமிகு பிரதமர், மத்திய கல்வி அமைச்சர், ஆகியோருக்கும் மத்திய அரசை சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் வாயிலாக மனு அளிக்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சென்னை மாவட்டம்* சார்பாக கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் *தே.ஆ.ச மாநில தலைமை நிலைய செயலாளர் முனைவர் ராமசந்திர குமார் மாவட்ட தலைவர் திரு வே சீனிவாசகன் மாவட்ட இணை செயலாளர் திரு . இராஜேந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் ஞானம் மற்றும் ஆசிரியர்கள்* கலந்து கொண்டனர்.


தர்மபுரி மாவட்டம்

 ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்!!!

பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களை பாதுகாத்திட -TET தேர்வில் இருந்து விலக்கு கோரி இன்று நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் வழியாக அகில பாரத ராஷ்டிரிய சைஸிக் மகா சங்கத்தின் ஆசிரியர்கள் (ABRSM ) பாரத பிரதமருக்கும், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.


       இன்று 18.06.2026 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி அமைப்பின் சார்பில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழியாக தமிழ்நாடு முதல்வர், பாரத பிரதமர் மற்றும் பாரத கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு மனு வழங்க தருமபுரி ஆட்சியர் அலுவலகம் வந்த தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள்......


 கோரிக்கைகள் 


 1.கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009- (23/08/2010 ) மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்றம் 29/05/26 தாளிட்டு தீர்ப்பாணை -

16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்று பணியாற்றி வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்தல் மற்றும் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதல்வரிடம் கோருதல்.


 2.கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 16/11/2012 ஆண்டுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க பாராளுமன்றத்தின் நடப்பு ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடரில் உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவரக் கோரி பாரதப் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் D..முருகன், மாவட்ட செயலாளர் நா. குமார் ,அரூர் கல்வி மாவட்ட தலைவர் இராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி ஜெயலட்சுமி மற்றும் இணை செயலாளர் முருகன், பென்னாகரம் வட்டார செயலாளர் கார்த்திக் ,சேவை பிரிவு தலைவர் ராம்குமார் ,மகளிர் அணி செயலாளர் திருமதி.பரிமளா தேவி ஆசிரியை மற்றும் பல ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் CPS- இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு சந்திரசேகர் ஐயா வாழ்த்துரை வழங்கினார்.





கரூர் மாவட்டம்!!!

 




காஞ்சிபுரம் மாவட்டம்

 


நாகப்பட்டினம் மாவட்டம்

 



மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 18.6.2026 (வியாழன்)மாலை 5 மணி அளவில் தேசிய ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பின் வழிகாட்டலின் படி மூத்த ஆசிரியருக்கான TET தேர்வில் இருந்து விலக்களிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் வருகின்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஏற்றக்கோரி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் ,

மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் அவர்களுக்கும், டெட் தேர்விலிருந்து மூத்த ஆசிரியர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசை வலியுறுத்த தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை தீர்மான ஏற்ற கோரியும் கோரிக்கை கடிதங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் வாயிலாக மாண்புமிகு,பாரத பிரதமர்,மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்ப சமர்ப்பிக்கப்பட்டது .நிகழ்வில் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்ட தலைவர் 

திரு சா. பரமசிவம் செயலாளர் திரு .கணேசன் பொருளாளர் 

திரு.ஆறுமுக கடவுள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் பிற ஆசிரியர் சங்கமான ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி,வாடிப்பட்டி ஒன்றியம், பட்டதாரி ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,

நிர்வாகிகள் மதுரை மாநகராட்சி ஆசிரியர் நல உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் .முன்னதாக கடிதம் வழங்க நிகழ்வுக்கு முன் டெட் விலக்க மசோதாக்கான விளக்கக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரு சா. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்கள், பிற ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.










திண்டுக்கல் மாவட்டம்

 மாண்புமிகு பாரத பிரதமர் , கல்வித் துறை அமைச்சர், மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாயிலாக 2009 ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு. இளன் பருதி மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் மாவட்ட பொருளாளர் திரு மணிகண்டன் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. ஸ்ரீ சாருமதி தேவி 

மாநிலத் துணைத் தலைவர் திரு பா விஜய் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.








ஈரோடு மாவட்டம்

 ஈரோடு மாவட்டம் -இன்று 18-06-2026 (வியாழக்கிழமை) 2012க்கு முன் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டி மாண்புமிகு பிரதமர், மத்திய கல்வி அமைச்சர், ஆகியோருக்கும் மத்திய அரசை சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வாயிலாக மனு அளிக்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு ஈரோடு மாவட்டக் கிளை சார்பாக கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தே.ஆ.ச மாநிலப் பொதுச் செயலாளர் திரு‌ மு.கந்தசாமி, மாநிலப் பொருளாளர் திரு இரா.திருஞானகுகன், மாவட்டத் தலைவர் திரு மு.சண்முகராஜூலு,மாவட்டச் செயலாளர் திரு து. ஶ்ரீதரன், மாவட்டப் பொருளாளர் திரு சு.ர.சுரேஷ்குமார், பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் திரு மு.சந்திரசேகர், ஈரோடு ஒன்றிய செயலாளர் திரு ப.மயில்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.




திருவள்ளூர் மாவட்டம் 18.06.2026

 ABRSM - உடன் இணைந்த தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) - ன் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாரத பிரதமர் , மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவருக்கும் கட்டாய உரிமைச் சட்டம் (RTE) கொண்டு வந்த நாளிற்கு முன்பு பணியில் சேர்ந்த அனைத்து மூத்த பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை கடிதம் *திருவள்ளூர் மாவட்டம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.*


இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் திரு. M.K. திரிலோக சந்திரன், மாநில இணைச் செயலாளர் திரு. T. நீலமேகன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு. K. கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் திரு. M.S. பார்த்தீபன், திருவள்ளூர் கல்வி மாவட்ட தலைவர் T. சுப்பிரமணி, திருவள்ளூர் கல்வி மாவட்ட செயலாளர் திரு M. ஆனந்த்பாபு, திருவள்ளூர் கல்வி மாவட்ட துணை செயலாளர் S.M. ஜெயப்பிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் 

திரு. M. சதீஷ், கோட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திரளான தேசிய ஆசிரிய சங்க உறுப்பினர்களான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


முன்னதாக ஆட்சியர் அலுவலக வாயிலில் தங்களின் கோரிக்கைகாக பேரணி நடத்தி கோஷம் போடப்பட்டது.