+2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
Thursday, May 21, 2026
Wednesday, May 20, 2026
Tuesday, May 19, 2026
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!
இன்று (19/5/2026) செவ்வாய்க்கிழமை காந்திகிராம பல்கலைகழகத்தில் தேசிய ஆசிரியர் சங்கமும் காந்தி கிராம பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை மாநில இணைச்செயலாளர் திரு. ராகவன் வரவேற்புரை வழங்கினார்.
மாநில துணை தலைவர் திரு. விஜய் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பிரிவு பேராசிரியர் திரு ராஜா அவர்கள் மற்றும் பேராசிரியர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு பஞ்சநாதன் அவர்கள் தலைமை தாங்கி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு சேரும் மாணவர்களுக்கு காந்திகிராம பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்
. காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் திரு .உதயகுமார் (கணிதத்துறை) திருமதி. சத்யா Home science
பேராசிரியர். ராஜ்குமார்
கணிதத் துறை ஆகியோர் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைப் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்
இந்நிகழ்ச்சியை தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் மற்றும் பொருளாளர் திரு மணிகண்டன். பேராசிரியர் திரு ராஜாராம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
Monday, May 18, 2026
Saturday, May 16, 2026
ABRSM தேசிய செயற்குழு கூட்டம் - கர்நாடகா!!!
ABRSM தேசிய செயற்குழுவில்
கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு
தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள ABRSM(அகில பாரதீய ராஷ்டிரிய சைக்சிக் மகா சங்கம்) அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் மே 16,17 தேதிகளில் நடைபெற்று வருகிறது அதில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி,மகளிர் அணி செயலாளர் சாருமதி தேவி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது
ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் (TET EXAM) என்பதிலிருந்து அந்தந்த மாநிலங்களில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளுக்கு முன்பு வரை பணியில் சேர்ந்த அனைவருக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
தமிழகத்திற்கான,சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உரிய காலத்தில் நிலுவையின்றி விடுவிக்கப்பட வேண்டும்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு ஊழியர்களில் 95% பேர் விரும்பவில்லை என்பதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும்.
கல்வித்தகுதிகளுக்கு நாடு முழுவதும் தேர்ச்சி மதிப்பெண் ஒரே மாதிரியான அளவில் நிர்ணயம் செய்து ஒரு மாநிலத்தில் தேர்ச்சி பெற்றோர் எந்த மாநிலத்திலும் வேலை வாய்ப்பு பெற தகுதி பெற்றவர்களாக கருதப்பட வேண்டும்.
உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது இரண்டு ஆண்டு ஊதிய உயர்வு கொண்டதாக இருக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் இதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்தி 1-1-2026 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும். அதில் குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் ₹50000, வீட்டு வாடகைப்படி அடிப்படை ஊதியத்தின் சதவீத அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மேலும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 25,000/- நிர்ணயிக்கப்பட வேண்டும்.
NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில், SC/ST கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் NMMS உதவித்தொகை பெற மத்திய கல்வி அமைச்சகம் அனுமதிப்பது இல்லை. இது சரி செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Friday, May 15, 2026
Thursday, May 14, 2026
Wednesday, May 13, 2026
13.05.2026 TET PROMOTION CASE REVIEW PETITION CASE- UPDATE!!!
ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கின் 01-09-2025 நாளிட்ட தீர்ப்பின் மீதான 68 மறு சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையில் இன்று இருபதுக்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
இதில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி போன்றோர் வாதிட்டனர்.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மேகாலயா போன்ற பல்வேறு மாநிலங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்
வழக்கு விசாரணையை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகளும் வழக்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை வழக்கில் மிகவும் கடுமை காட்டினார்கள்
Parliment ன் RTE Act - Second Amendment பற்றி விவாதம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களின் கல்வி தரத்தை மையமாகக் கொண்டு கவனமாகக் கொண்டு அதில் அதிக முக்கியத்துவத்தை இரண்டு நீதி அரசர்களும் கொடுத்து விசாரணை மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு அரசு சார்பில் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் குப்தா இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் கூடுதலாக இரண்டு ஆண்டு காலம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார்.
பதவி உயர்வு சார்ந்து எந்த வழக்கறிஞர்களும் எந்தவிதமான வாதத்தையும் முன் வைக்கவில்லை.
அதாவது பதவி உயர்வு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா அல்லது கட்டாயம் இல்லையா என்பது பற்றி எந்த வழக்கறிஞர்களும் வாதிடவே இல்லை.
தேர்ச்சி பெறுவதற்கு கூடுதலாக காலம் வழங்குவது பற்றி பரிசீலிக்கிறோம் என்று 2 நீதி அரசர்கள் கூறியுள்ளார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற கூடுதல் கால அவகாசத்தை கேட்டு வேறு சில மாநிலங்களும் வாதங்களை முன் வைத்தார்கள்
31-08-2027 க்குள் 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இரண்டு ஆண்டு காலம் கால அவகாசம் நீட்டிப்பு என்பது இரண்டு நீதி அரசார்களாலும் வழங்கப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.
Tuesday, May 12, 2026
Monday, May 11, 2026
பழனி வட்டார செய்திகள்!!!
தேசிய ஆசிரியர் சங்கம். தமிழ்நாடு. திண்டுக்கல், பழனி கல்வி மாவட்ட சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஆய்வாளர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பராபவ வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.



















