Saturday, December 28, 2024

மாநில செயற்குழு 28/12/2024

 அனைவருக்கும் வணக்கம் . 

நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (28/12/2024) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் நமது மாநிலத் தலைவர், மாநில பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில இணைச்செயலாளர்கள், மாநில மகளிர் அணிச் செயலாளர்கள், மாநில ஊடகப்பிரிவு செயலாளர்கள் , கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது மாவட்ட பணிகள் குறித்து கலந்துரையாடினர் .  செயற்குழுக் கூட்டத்தில் ஆசிரியர் நலன், மாணவர் நலன் சார்ந்த  தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. பல மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மாநில செயற்குழு தீர்மானங்கள் - Click Here 

PHOTO ALBUM
































Friday, December 27, 2024

சென்னை மாவட்ட செய்திகள் !!!

 இன்று (27-12-2024)தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில தலைவர் திரு திரிலோக சந்திரன் ,மாநில செயலாளர்கள் திரு வினோத்குமார்,திரு ராஜகோபால்,கோட்ட செயலாளர் திரு திரு ராமச்சந்திர குமார் மற்றும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து 2025 சங்க நாட்காட்டி வழங்கிய நிகழ்வு!!!






















👆🏿*இன்று 27.12.24 நம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் அதிகாரிகளுடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு மற்றும் அனைத்து பிரிவுகளுக்கும் நாட்காட்டி வழங்கல் நிகழ்வினை நாம் சிறப்பாக செய்து முடித்தோம்.*


*பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஐயா* அவர்களையும்

*பிற துறைகளின் இயக்குநர்களையும்* 

*JD HSS / JD VOC / JD SCERT JD / JD SYLLABUS / JD EXAMS / JD ADMN*

*பிற துணை இயக்குநர்களையும்*

*மற்றும் சட்ட அலுவலர்,நிதி கட்டுப்பாட்டு அலுவலர்கள்,*

*தலைமை கண்காணிப்பாளர்கள், திட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவு கண்காணிப்பார்கள்* உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையுமே சந்தித்தோம்.

*இந்நிகழ்வுகளும்*

 *நம் சங்கத்தின் ஒரு மைல்கல் என்பதே உண்மை*

🙏🙏🙏🙏🙏🙏

Thursday, December 26, 2024

புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்!!!

 இன்று (26/12/2024) நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் 2025 ஆங்கில புத்தாண்டு நாட்காட்டி மரியாதைக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் , மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் , SSA அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் வழங்கப்பட்டது.










உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விடுமுறையில் சிறப்பு வகுப்பு வைக்கக்டாது - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!!!.

 


IFHRMS - HOW TO MAKE ONLINE PENSION PROPOSAL IN OPPAS !!!

 ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு!!!!!

 HOW TO MAKE ONLINE PENSION PROPOSAL IN OPPAS

online pension proposals - DOWNLOAD

Wednesday, December 25, 2024

Kalanjiyam App - 01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள்!!!





 SAINIK SCHOOL ENTRANCE EXAM 2025

The National Testing Agency ( NTA ) will conduct the All- India Sainik School Entrance Examination ( AISSEE - 2025 ) for admission to Class VI and Class IX in Sainik Schools / New Sainik Schools across the country , for the academic year 2025-26.




TET PROMOTION CASE UPDATE !!!

07-1-2025 ல் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலுக்கு ஒரு Advance list ஐ சுப்ரீம் கோர்ட் வெளியிடும். அதில் பதவி உயர்வு வழக்குகள் இடம் பெற்றுள்ளன.


52 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

Tuesday, December 24, 2024

ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை போதிக்கும் மாணவர் நலம் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்பு பெற்று செயல்படும் (தலா 5) ஆசிரியர்கள் என மொத்தம் 40 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து ஜனவரி 8ஆம் தேதிக்குள் பட்டியல் அனுப்ப... வட்டார கல்வி அலுவலர்களுக்கு தொடங்க கல்வி இயக்குனர் உத்தரவு!!!

 Download 



சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம் & பதவி உயர்வு - TET வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

 சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம், பதவி உயர்வு TET அடிப்படையில் வழங்கவும், உச்ச நீதிமன்றத்தில் TET வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Sivagangai  R.C.School Hm Promotion - Regards 👇👇👇

Download here

Monday, December 23, 2024

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை (24.12.2024) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு!!!

 


பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!

 பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

SPD - Internet Proceeding - Download here

இராணிப்பேட்டை மாவட்ட செய்திகள் !!!

 அனைவருக்கும் வணக்கம்.

நமது இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்மா அவர்களிடம் தேசிய  ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு காலண்டர் வழங்கிய நிகழ்வு.




பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி ? PM Uchchatar Shiksha Protsahan Scholarship Yojana

 பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.


ஏழ்மை காரணமாக ஒரு மாணவர்/மாணவியருக்கு உயர்க் கல்வி மறுக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்குகிறது.


தகுதியுள்ள மாணவ/மாணவிகள்


குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.


18 முதல் 25 வயதுடைய மாணவ/ மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


தொலைதூர கல்வி முறையில் பயின்றவர்கள் ஊக்கத்தொகைக்கு தகுதியில்லை.


வருமான  சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.


12ஆம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த(3+2 ஆண்டுகள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.


தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கபட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.


மத்திய மற்றும் மாநில அரசின் வேறெந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழும் பயன்பெறுபவராக இருக்கக் கூடாது.


இடை நிற்கும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தால் நீக்கம் செய்யப்படும் மாணவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை நிறுத்தப்படும்.


ஒவ்வொரு ஆண்டுத் தேர்விலும் 50 சதவிகித மதிப்பெண்ணும் குறைந்தபட்சம் 75 சதவிகித வருகை பதிவேடும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Paper News - TOI Chennai Edition!!!

 


திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை, தேசிய ஆசிரியர் சங்க  மாநிலத் தலைவர் திரு  திரிலோக சந்திரன் அவர்களுடன் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து நம் சங்கத்தின் நாள்காட்டியை வழங்கி, நூல் பரிசளித்த போது...