Friday, July 7, 2023

IT RETURN : 80CCD(2)-ல் யார் கழிக்கலாம்? எவ்வளவு கழிக்கலாம்?


தற்போது தனிநபர் வருமானவரிக் கணக்கை வருமான வரித்துறைக்குச் சமர்ப்பிக்கும் IT Return பணிகளை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.


80CCD(2) : NPS EMPLOYER'S CONTRIBUTION


NPS எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு தனது பங்களிப்பாக 14% தொகையை வழங்குகிறது. (முன்னர் 10%ஆக இருந்தது). இத்தொகைக்கு 100% வரிவிலக்கு உண்டு.


அதாவது அரசின் பங்களிப்பிற்கு வரி கிடையாது. வரி கிடையாது என்றாலும் அத்தொகையை முறையாக வருமான வரித்துறைக்கு நாம் காண்பித்தாக வேண்டும். 


இதன்படி ஒன்றிய & பொதுத்துறை (வங்கி, அஞ்சலகம் உள்ளிட்ட) நிறுவன ஊழியர்களுக்கு ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் அவர்களது வருமான வரி கணக்கிடும் சமயத்தில் அரசின் 14% பங்களிப்புத் தொகையும் மொத்த வருமானத்தில் காட்டப்படுகிறது. பின்னர் 80CCD(2)-ல் கழிக்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களைப் பொறுத்தவரை 12 மாத ஊதியம் & நிலுவை ஊதியத்தை உள்ளடக்கிய மொத்த ஊதியம் (Gross Amount) மட்டுமே வருமான வரிப்படிவத்தில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. சில அலுவலகங்களில் ஊழியர் அளிக்கும் தனிப்பட்ட சில கூடுதல் வருமானங்கள்கூட Income from other Sources என்ற தலைப்பில் சேர்த்துக் காண்பிக்கப்படுகின்றன. ஆனால், CPS திட்டத்தில் அரசின் பங்களிப்புத் தொகையான 10% தொகை எவருக்கும் வருமானத்தில் காண்பிக்கப்படுவதில்லை. 


ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் அரசின் பங்களிப்பு என்ன என்பதை அரசு வெளியிட்ட பின்னரே ஊழியர்களோ அலுவலர்களோ அறிந்து உறுதி செய்து கொள்ள முடியும். அதுவும் பெரும்பாலும் ஒரு அக்குறிப்பிட்ட நிதியாண்டே முடிந்த பின்னர்தான் வெளியிடப்படும் என்பதால் அரசின் பங்களிப்புத் தொகையை வருமானத்தில் காட்டப்படுவதற்கான சூழலே இருப்பதில்லை.


எனவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் தங்களது வருமானவரிக் கணக்கை சமர்ப்பிக்கும் பொழுது 80CCD(2)-ல் எந்தவிதத் தொகையையும் இட்டு கழிக்க வேண்டிய தேவையில்லை. கழிக்கவும் கூடாது.


ஒருவேளை அரசின் பங்களிப்பைக் கழிக்க விரும்பினால், Income from other Sources-ல் காண்பித்து பின்னர் 80CCD(2)-ல் கழித்துக் கொள்ளலாம்.


Thanks to

✍🏼செல்வ.ரஞ்சித் குமார் அவர்கள்


No comments:

Post a Comment