Sunday, July 9, 2023

திண்டுக்கல் மாவட்ட செயதிகள்

தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு 💐💐💐💐💐💐💐💐💐💐குரு வணக்கம் நிகழ்ச்சி 

இன்று (9/7/2023) திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர்  சங்கம் சார்பாக குரு வணக்க நிகழ்ச்சி கோபாலசமுத்திரம் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பால ஆஞ்சநேயர் திருக்கோவில் தியான மண்டபத்தில்  நடைபெற்றது.   நிகழ்ச்சி சரஸ்வதி வந்தனத்துடன் நடைபெற்றது.நிகழ்ச்சியின் தொடக்கமாக மாவட்ட தலைவர் திருமதி. வைரமணி வரவேற்புரை நிகழ்த்தினார் .சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட தலைவர் திரு. நாகராஜ் தலைமை ஏற்றார். மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ஸ்ரீ சாருமதி தேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் தேசிய ஆசிரியர் சங்கத்தின் பணிகளைப் பற்றி பேசினார். GTN கலைக் கல்லூரியின் பேராசிரியர் Dr.ராமச்சந்திரன் குருவின் பெருமை பற்றியும் ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும்  விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் திரு. ஆறுமுகம் தொகுத்து வழங்கினார் மாவட்ட பொருளாளர் திரு.மணிகண்டன் நன்றியுரை வழங்கினார். நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐







 

No comments:

Post a Comment