மதுரை மாவட்ட செய்திகள்
குருவணக்கம் நிகழ்ச்சி
இன்று (21/07/2023) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மதுரை மாவட்டம் சார்பாக மீனாட்சிசுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரு வந்தனம் நிகழ்வு நடைப்பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.இந்து மதி அவர்களின் தலைமையில் முன்னாள் தலைமை ஆசிரியை (ஓய்வு) திருமதி.N. இராதா முன்னிலையில் 25 ஆசிரியை ஆசிரியர்கள் பங்கேற்பில் விழா 5 மணியளவில் குத்து விளக்கு ஏற்றி சரஸ்வதி வந்தனத்துடன் தொடங்கியது. விழாவில் மாநில துணைத்தலைவர் திரு.விஜய் பங்கேற்று குரு வந்தனத்தின் முக்கியத்துவத்தையும், தேசிய ஆசிரியர் சங்கத்தின் பணிகளையும், சாதனைகளையும் எடுத்துரைத்தார். மதுரை மாவட்ட சேவா பாரதியின் செயலாளர் திரு.சுரேஷ் பங்கேற்று விழாவிற்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியைக்கும் சிறந்த மாணவிகளுக்கும் தேசிய ஆசிரியர் சங்கத்தால் பரிசளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட செயலாளர். திரு.பரமசிவம் விழா ஏற்பாட்டினை செய்திருந்தார்.நாட்டு நல வாழ்த்துடன் விழா இனிதே நிறைவுப்பெற்றது.
No comments:
Post a Comment