குரு வணக்கம் நிகழ்ச்சி
கடந்த 15/7/2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஜன நிதி அலுவலகம், கார்த்திக் ஆயில் மில் மாடி, தேனி காவல் நிலையம் எதிர் சந்து என்ற முகவரியில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தேனி மாவட்டத்தின் சார்பாக குரு வணக்கம் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜன நிதி வங்கியின் செயலாளர் திருமிகு ராஜ் மனோகரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ABVP மாநிலத் துணைச் செயலாளர் ஐயா திரு நல்லசிவன் அவர்களும் நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் திரு ராமதாஸ் அவர்களும் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட செயலர்
திரு ம சிவக்குமார் அவர்கள் வரவேற்று பேசினார்கள். நிறைவாக திரு ராஜா மாவட்ட பொறுப்பாளர் அவர்கள் நன்றி வரை ஆற்ற குரு வணக்கம் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி இறைவணக்க பாடலுடனும் தமிழ் தாய் வாழ்த்துடனும் தொடங்கியது. அடுத்த நிகழ்வாக குத்து விளக்கு ஏற்றப்பட்டது. அடுத்த நிகழ்வாக வரவேற்புரை திரு மா சிவக்குமார் அவர்கள் ஆற்றினார்கள் .
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் அறிமுகம் நடைபெற்றது. விருந்தினர்களை திரு ம சிவக்குமார் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் அறிமுகம் மற்றும் அதன் குறிக்கோள் பற்றி மாவட்ட செயலாளர் பேசினார்கள். அதற்கு அடுத்ததாக தலைமை உரையாக நமது சங்கத்தினை பாராட்டி தலைமையேற்று நடத்திய நமது சிறப்பு விருந்தினர் திரு ராஜ் மனோகரன் அவர்கள் உரை ஆற்றினார்கள். அடுத்த நிகழ்வாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு நல்லசிவன் ஐயா அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நமது குரு வணக்கம் நிகழ்ச்சியின் மைய கருத்தாக குரு வணக்கம் பற்றியும் அது எவ்வாறு பண்டைய காலங்களில் செலுத்தப்பட்டது அதன் வரலாறு அதனுடைய பாரம்பரியம் என்ன என்பதை திரு நல்லசிவன் ஐயா அவர்கள் தெளிவாக விளக்கி கூறினார்கள் .
மிக அழகாக கருத்துக்களை கோர்த்து தெளிவான நடையில் எங்களுக்கு வழங்கியது மிக அருமையாக இருந்தது.
தேனி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக திருமதி கே ஜானகி அவர்களை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டது. அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிறைவாக திரு ராஜா அவர்கள் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் இனிதே நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment