*தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு*
14.03.2022
பெறுநர் –
பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக் கல்வி ஆணையரகம்,
சென்னை – 600 006.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் – பட்டதாரி ஆசிரியர் - பொதுமாறுதல் கலந்தாய்வு – கூடுதல் தேவை – என அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை மாவட்டத்திற்குள் – மாவட்டம் விட்டு மாவட்டம் – மாறுதல் கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டுதல் – சார்பு
பார்வை – பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.040678 / சி3 / இ1 / 2021 நாள் 13.01.2022
வணக்கம். பார்வையில் காண் செயல்முறைகள் அடிப்படையில் கூடுதல் தேவை உள்ள பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அப்பணியிடங்களை வரும் 15.03.2022, 16.03.2022 மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் வகையில் காலிப்பணியிடங்களாக காட்டப்படுவதே பல ஆண்டுகளாக சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெற காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், கூடுதலான மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கும் உதவியாக இருக்கும் என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கருதுகிறது.
ஆகவே, பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலில் நிரப்பப் பட்டது போக மீதி அனைத்து கூடுதல் தேவை பணியிடங்களையும் காலிப் பணியிடங்களாக காட்டிடவும், பணி நிரவலில் ஆணை பெற்ற ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு தருமாறும் தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
மேலும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சில மாவட்டங்களில் பிறபணி எனவும் தற்செயல் விடுப்பு எனவும் வழங்கப்படுவதை முறைப் படுத்தி ஒரே மாதிரியாக வழங்கிட வழிகாட்டுதல் வழங்கிடவும் அன்புடன் வேண்டுகிறோம்.
என்றும் தேசிய கல்விப் பணியில்
மாநிலத் தலைவர்
மாநில பொதுச்செயலாளர்
நகல்
1. பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர்,
தலைமைச் செயலகம், சென்னை - 9
2. பள்ளிக் கல்வி இணைஇயக்குநர் (பணியாளர் தொகுதி)
சென்னை – 6
No comments:
Post a Comment