Monday, September 16, 2024

Kalaithiruvila - Date Extension

 


கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்!!!

 நமது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களையும் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) திரு தண்டபாணி ஐயா அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது வாழ்த்துக்களை தெரிவித்து நமது சங்கத்தின் செயல்பாடுகளை குறித்து விரிவாக எடுத்துரைத்தோம் அவர்களும் நமது சங்கத்தின் செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். 

இந்த இனிய நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் திரு கதிர்வேல் மாவட்ட தலைவர் திரு ராமச்சந்திரன் மாவட்ட செயலாளர் திரு தர்மலிங்கம் சங்கராபுரம் வட்ட தலைவர் திரு லோக நாராயணன் சங்கராபுரம் வட்ட செயலாளர் திரு செந்தில் குமார் தியாகதுருகம் வட்டத்தை சேர்ந்த திரு இளையராஜா ரிஷிவந்தியம் வட்டத்தை சேர்ந்த திரு. பூபதி மற்றும் திரு கோவிந்தராஜ் திரு . தியாகராஜன் திருமதி சங்கீதா இன்னும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.




சென்னை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 16/9/2024 தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பாக சென்னையில்  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களை  சந்தித்து பள்ளி நலன் ஆசிரியர் நலன் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

நமது  சங்கம் சார்பாக  வைக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் விவரித்த பின்பு உரிய நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் உறுதியளித்தனர்.

நமது கோரிக்கைகள் - CLICK HERE 






Pledge

 


Thursday, September 12, 2024

அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு!!!

 பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50% பணியிடங்களில் 2% பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு விவரங்களை அனுப்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உத்தரவு.

 Dir Proceedings - Download here


அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

 GO NO : 281 , DATE : 06.09.2024 - Download here


பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணி ஓய்வு மற்றும் இறப்பு ஏற்படும் போது மத்திய அரசு வழங்கியது போல் பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை.


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு, மற்றும் இறப்பவர்களுக்கு எதுவும் கிடையாது...

Wednesday, September 4, 2024

CPS missing credit சார்ந்த பதிவு!!!

 

1) பணியாளர்கள் cps.tn.gov.in/public  website இல் சென்று individual login..

account statement download செய்து கொள்ளலாம் ( தற்போது 

நாம் CPS இல் சேர்ந்த / பணியில் சேர்ந்த நாள் முதல் 2023-24 நிதியாண்டு வரை அனைத்து வருட statement வருகிறது)


2) missing credit இருக்கிறதா என பாருங்கள்?

( Statement இல் கீழே missing credit month - என இருக்கும்)


3) சில நேரங்களில் DA arrear/ SG arrear CPS பிடித்தம் a/c statement இல் இல்லாமல் இருக்கலாம்... அதையும் சரிபார்த்து கொள்ளுங்கள்...


CPS missing credit இல்லை எனில் நன்று...

இருந்தால்


 How to rectify missing credit ?


1) login school/DDO CPS website... cps.tn.gov.in


2) login id 

treasury code_old DDO code

eg 0708_SB456

Password 

treasury code_old DDO code_123

Eg 0708_SB456_123


3) select missing credit


4) MC(2023-24)


5) select month select employee CPS number submit 


6) forward to other treasury?

select yes or no 

தற்போது நம்மிடம் பணிபுரிகிறார் ஆனால் missing credit பழைய பள்ளியில் இருக்கும் போது எனில் yes கொடுத்து 

select district select treasury select DDO submit ( பழைய பள்ளிக்கு மாறி விடும்) நமது பள்ளியில் இருக்கும் போது தான் missing credit எனில் NO...


7) loss of pay, death, already paid,... இது போன்ற காரணம் எனில் select respective reason


8) உண்மையில் missing credit  எனில்...


Enter amount...

CPS schedule total amount...

Token no...

Date....

Voucher no...

Date ( last date of the month)... 

Treasury...

Date of encashment...

Bill GA...

Bill NA...

Head of account...(eg 2202)

15A..

Originally booked Head ( 8342) (en face ment first four digits)

Reason....( Select)

Submit.....


9) note.... 

CPS contribution 10000 க்கு மேல் எனில் அந்த மாத CPS schedule pdf ஆக attachment செய்ய வேண்டும் 


10) ஒரே ஒரு missing credit தான் எனில் submit க்கு பிறகு finalize the entry...


11) ஒன்றுக்கு மேற்பட்ட CPS missing credit எனில் ஒவ்வொன்றாக entry போட்ட பிறகு கடைசியில் தான் finalize the entry வழங்க வேண்டும்...


12) finalize செய்து முடித்த பிறகு... Forward to treasury


13) நமது பணி முடிந்தது...


14) dashboard இல்..

 total no of missing credit...

Completed...

Forwarded...

Yet to complete....

என இருக்கும் அதை வைத்து முடித்தது/ முடிக்காதது பற்றி தெரிந்து கொள்ளலாம்...


பதிவு தான் பெரிதாக இருக்கிறது 

சில நிமிடங்களில் மொத்த பணியாளருக்கும் எளிதாக முடித்து விடலாம் 


15) IFHRMS இல் 

initiator...

Finance...

Bills...

Bill report...

TNTC 70.... e-70 download...


செய்து கொள்ளுங்கள்..

இதில் token no... Bill no.. GA/NA.. voucher no...DOE.. என அனைத்தும் இருக்கும்...


16) அடுத்த ஆண்டு 2024-25 statement போது ... இந்த missing credit தொகை நமது கணக்கில் வரவு செய்யப்பட்டு இருக்கும் .


(IFHRMS உள்ளேயும் சென்று missing credit entry செய்ய இயலும்)



மாநில நல்லாசிரியர் விருது 2024

 டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.


தொடக்கக் கல்வித்துறை

Dr Radhakrishnan Best Teachers Award 2024 - Selected Teachers List ( DEE )
👇👇👇

பள்ளிக் கல்வித்துறை 

Dr Radhakrishnan Best Teachers Award 2024 - Selected Teachers List ( DSE)  
👇👇👇

Private School Teachers List 


Sunday, September 1, 2024

திருமலை - திருப்பதி - ஆன்மீகச் செய்திகள்!!!

 திருப்பதி - 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்


1. வேங்கட மலை:


‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.


2. சேஷ மலை:


பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.


3. வேதமலை:


வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.


4. கருட மலை:


இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.


5. விருஷப மலை:


விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.


6. அஞ்சன மலை:


ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.


7. ஆனந்த மலை:


ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.


திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். அவர்களில்,


1.த்ருவ ஸ்ரீநிவாசர்,


2. போக ஸ்ரீநிவாசர்,


3. கொலுவு ஸ்ரீநிவாசர்,


4. உக்ர ஸ்ரீ நிவாசர்,


5. மலையப்பர்


என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.


1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :


இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.


2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :


இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.


3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :


கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.


4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :


இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்துவிட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.


5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :


இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.


ஓம் நமோ நாராயணா....



Thursday, August 29, 2024

10,11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு !!!

 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

Wednesday, August 28, 2024

Paper News With Judgement Copy!!!

 ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

Download 


Saturday, August 24, 2024

TN CM TROPHY 2024 DATE EXTENDED UPTO 02/09/2024

🇮🇳  *_அண்மை செய்தி_* 📡

🔹🔸 *தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது..

 Click Here For More Details



EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions!!!

 முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்ட குறிப்புகள் :


 முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களால் 23.08.2024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது . கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும் , அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது.


PA TO CEOs 23.08.24 MEETING MINUTES

Download here