Wednesday, August 21, 2024

TNPSC DEPARTMENT EXAM EXCEPTION !!!

 மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் வெளியிடப்படுகிறது.

 G.O (Ms) No.11, Dt. 13.08.2024 - Download here

FLASH NEWS

 Download 



HSHM - PG CASE- UPDATE

வழக்கு நாளை ( 22-8-24- வியாழன் ) விசாரணைக்கு வருகிறது.



Friday, August 16, 2024

Career Guidance Aug 24 - Assessment Schedule!!!

 தலைமையாசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.


🏝️ அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு 19.08.2024 முதல் 23.08.2024 வரை உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெறுகிறது.


🏝️ உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டிற்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் இணைய வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை செய்து முடித்தல் வேண்டும்.


🏝️19.08.2024 & 20.08.2024- 9 ஆம் வகுப்பு 

20.08.2024 & 21.08.2024 - 10 ஆம் வகுப்பு 

21.08.2024 & 22.08.2024 - 11 ஆம் வகுப்பு 

22.08.2024 & 23.08.2024 - 12 ஆம் வகுப்பு 


Steps.

Server : http://locsrv.in:8080

Step1. Log in by school id or HM id.


Step2. Click manage and click update credentials and give update 


Step3. Click manage and click Fetch events and give update.


Step 4. Log in by class teacher id or school id.


Step 5. Click Download QP


Step 6. Log in by students id in other thin clients and start assessment.


Step 7. Log in by headmasters/ school id in server system and click manage and give send response.




Wednesday, August 14, 2024

Teachers Award 2024 Instructions!!!

 


கலைத்திருவிழா 2024 - Important Dates!!!


பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து

 சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு 


இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

 போட்டி நடைபெறும் நாட்கள்

 22.08.2024 முதல் 30.08.2024 வரை

அரசுப் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.

கலைத் திருவிழா போட்டிகள் *ஐந்து பிரிவுகளில்* நடைபெறும்.


பிரிவு 1️⃣

1 மற்றும் 2ஆம் வகுப்பு


பிரிவு 2️⃣

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 3️⃣ 

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 4️⃣ 

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 


பிரிவு 5️⃣ 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு


 *சில வழிகாட்டுதல்கள்* :


🔵 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.


🔵 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.


🔵 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.


🔵 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


🔵 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.


🔵 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.


 EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்


🔴 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்

(19.08.2024 - 21.08.2024)


🔴 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும். (03.09.2024)


🔴 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற 

தகுதி பெறுவர்.



🟢 *சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN)* பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


🟢 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ( *ID, ASD, CP)* மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 


🟢 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.


 🟢 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.


🟢 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


🟦 இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி அந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




Monday, August 12, 2024

திருப்பூர் மாவட்ட செய்திகள்!!!

 நம் மாவட்டத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு  உதயகுமார். ஐயா அவர்களை இன்று திங்கள் கிழமை (12.8.2024) மாலை நம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்ற நிகழ்வு !!!




Sunday, August 11, 2024

Disciplinary Proceedings Timeline!!!

 Download 

RTI ABOUT M.Phil !!!

 


திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்!!!

 இன்று 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் ஸ்ரீ அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் *குரு வணக்கம் நிகழ்ச்சி*  *பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா*  *பசுமை தமிழகம் திட்டம் தொடக்க விழா* என முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது ஏறத்தாழ 100 சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். வித்யா பாரதி சேவா பாரதி தேசிய ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் இருந்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். மாநிலத் துணைத் தலைவர் திரு முருகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் *பகவத் கீதை* பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.ஸ்ரீ அமிர்தா கல்வியியல் கல்லூரியின் தாளாளர் மற்றும் வித்யா பாரதி அமைப்பின் மாநில நிர்வாகி டாக்டர் மாதவ பாரதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அவருக்கு அமைப்பின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. புதுப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் திரு மோகன் அவர்கள் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய புதுமையான கற்றல் முறைகள் குறித்து விளக்கமாக பேசினார்.

சேவா பாரதி அமைப்பின் வட தமிழக அமைப்பாளர் மானனிய சீனிவாசன் ஜி அவர்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார் மதியம் அறுசுவை விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.










Friday, August 9, 2024

 Download 



இன்று (09.08.2024) மரியாதைக்குரிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை ஆணையர் திரு. சம்பத் இ ஆ பா அவர்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வழங்கினோம். அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார் .

 Download 


HM PROMOTION CASE - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக வரும் திங்கட்கிழமை 12/08/2024 விசாரணைக்கு வருகிறது !!!

 


Saturday, August 3, 2024

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்!!!

 இன்று தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு அமைப்பின்  திண்டுக்கல் மாவட்டம் சார்பாக குரு வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில். நிகழ்வு மாவட்டத் தலைவர் திருமதி வைரமணி அவர்கள் வரவேற்புரை நல்கினார். மதுரை மாவட்ட தலைவர் திரு. பரமசிவம் அவர்கள் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. சாருமதி தேவி .மாநிலத் துணைத் தலைவர் திரு.பா. விஜய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமை உரையை வாசவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் வழங்கினார்.நிகழ்ச்சியில்  ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி  நிறுவனத்தின் முன்னாள்முதல்வர் திரு.மோகன்ராம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை  வழங்கினார். நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் திரு ஆறுமுகம் மற்றும் மாவட்ட ஊடக செயலாளர் திரு அழகேஷ்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்களாய் இருந்து தற்சமயம் ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களான திரு. ராஜபாண்டியன் .திருமதி. தேவி ஜான்சிராணி .திரு. சேரன் செங்குட்டுவன் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. மோகன்ராம் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டன. மற்றும் பசுமைத் தமிழகம்திட்டம் துவங்கப்பட்டது.