Saturday, August 3, 2024

திருவள்ளூர் மாவட்ட செய்திகள் !!!

 தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டம்

 முப்பெரும் விழா

 குரு வணக்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பசுமைத் தமிழகம் தொடக்க விழா

 இன்று( 03:08:2024 ) காலை, DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் திரு. ம.கோ.திரிலோகசந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் திரு வெ. கதிரொளி வரவேற்புரை நிகழ்த்தினார்.

குருவின் பெருமையைப் பற்றி  அரசு மேல்நிலைப்பள்ளி (ஆண்கள்)

இரா.கி.பேட்டை , தலைமை ஆசிரியர் திரு.கோ.சுந்தர் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார். 


சிறப்பு அழைப்பாளர்களாக DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கி.வெ. ராமமோகன் அவர்களும், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சே.ஆ. தாமோதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.


பணி ஓய்வு பெற்ற சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நா. பூபாலமுருகன் அவர்களும், திருவள்ளூர் டிஆர்பிசிசி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. இரா. கலைச்செல்வன் அவர்களும், செஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. வி.குணசேகரன் அவர்களும், பேரம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் திரு. சி. பழனி அவர்களும், திருவள்ளூர் ஆர். எம். ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு. இரா.இரவிச்சந்திரன் அவர்களும் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.


மாவட்ட செயலாளர் திரு. தி.நீலநேகன் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்ய,

மாநில தலைமையிடத்து செயலாளர் திரு.ச.வினோத்குமார் முன்னிலை வகித்தார்.


கோட்டச் செயலாளர் திரு.ம. சதீஷ் குமார் அவர்கள் நன்றி கூறினார்.

 விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் திரு.மே.சு.பார்த்தீபன் மற்றும் பொறுப்பாளர்கள் திரு.கிருஷ்ணகுமார், திரு.பரமசிவம், திரு.நவீன்குமார் ஆகியோர்  செய்தனர்.










Friday, August 2, 2024

தொழில் வரியை ₹1250/- ஐ விட அதிகரிக்க முடியுமா ??? Paper News

 


HI Tech Lab Assessment Cycle 2

 மதிப்பீட்டு புலம்

Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி *August 06 முதல் August 16* வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். 

முக்கிய குறிப்புகள்:

1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.

2. *6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு  4 கேள்விகள் வீதம் 6 பாடத்திற்கு 24* *கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்* . 

3. July-இல் நடைபெற்ற Hi -Tech lab Assessment - Quiz - Cycle 01 ஐ 80% பள்ளிகள் முழுமையாக நடத்தி முடித்தனர். 80% (18,85,104) மாணவர்கள் Assessment - Quiz இல் பங்கேற்றுள்ளனர். 

4. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 -விற்கான Event ID உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Event ID ஐ பயன்படுத்தி Question Paper Allocation நிகழ்வை Assessment நடைபெறும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும்.



Thursday, August 1, 2024

SMC - பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு மற்றும் செலவினம் பற்றிய மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் !!!

 Download 



தர்மபுரி மாவட்ட செய்திகள்!!!

 நேற்று 31/7/24 தர்மபுரியில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா குரு வணக்கம் ,சமூக சேவைக்கான விருது மற்றும் பசுமை தமிழகம்  -விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஶ்ரீ G. லட்சுமணன் ஜி ABRSM அகில பாரத இனை அமைப்பு செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு குரு வணக்கம் பற்றி உரையாற்றினார் மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஶ்ரீ C.முத்துகுமரன் கமலம் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர்  ஶ்ரீ M.முருகன் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் கலந்து கொண்டனர் .தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் D. முருகன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட மகளீர்  பொறுப்பாளர் M. அமுதா,M. சுகுணா மாவட்டச் செயலாளர் N.குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மாவட்டத் துணைத் தலைவர் K. சுரேஷ்  அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தார் மேலும் G.சத்தியநாராயணன் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
























Monday, July 29, 2024

Career Guidance August 24 Schedule

 


கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்!!!

 கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம்  - தமிழ்நாடு சார்பாக குரு வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகளும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.











Sunday, July 28, 2024

விருதுநகர் மாவட்ட செய்திகள் !!!

வியாசர் பகவான் அவதார தினத்தை முன்னிட்டு ஆடி மாதம்  தமிழகம் எங்கும், தேசிய ஆசிரியர் சங்கம் குருவந்தனா விழாவாகக் கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு தேசிய ஆசிரியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக் கிளை சார்பாக 26 -07- 2024 ஞாயிற்றுக்கிழமை  காலை 10:30 மணி அளவில் குருபூஜை விழா இராஜபாளையத்தில்  நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் திரு.சே.சரவணச்செல்வன் வரவேற்றார்.  மாநிலத் துணைத்தலைவர் திரு.பா.விஜய் அவர்கள் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார்கள்.  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நல்லாசிரியருமான முனைவர் T.Nராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.  விழாவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகளும், ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டார்கள். மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் (notebooks) வழங்கப்பட்டன. குமரன்
ஸ்வீட்ஸ்டால் உரிமையாளர் திரு ரவிக்குமார் அவர்கள் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கினார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் இந்த ஆண்டு திட்டத்தின் படி புங்கை , வேம்பு, பாதாம் , மகாகனி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும், மாணவ மாணவிகளும் மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர். பள்ளிக்கு 10 மரங்கள் வீதம் பள்ளிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு முழுவதும் மரக்கன்றுகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் தேவை உள்ளவர்கள் பெற்றுச் செல்லலாம் என்று மாநிலத் துணைத்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்கள். 
மாவட்டச் செயலாளர் திரு.செ.இஞ்ஞாசி ராஜா அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. விழா நிறைவு  பெற்றவுடன் வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.









Friday, July 26, 2024

மதுரை மாவட்ட செய்திகள்

 இன்று 25/07/2024 மதுரை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக குரு வந்தனம்  நிகழ்வு மதுரை தெப்பகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் நூலகர் / மாணவர் விடுதிக் தலைமை காப்பாளர், யோகா கலைஞர் திரு. கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.நிகழ்வு குத்து விளக்கு ஏற்றி சரஸ்வதி வந்தனத்துடன் தொடங்கி தலைமை ஆசிரியை திருமதி. இந்து மதி அவர்களின் தலைமை உரையுடன் துவங்கியது மதுரை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரு.சா.பரமசிவம் வாழ்த்துரையாற்ற சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்ற நிகழ்வு மிக சிறப்பாக அமைந்தது அனைவரும் குருவின் பெருமை பற்றி சிறப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்வில் பள்ளியளவில் சிறந்து விளங்கிய மாணவியர்களுக்கும் பள்ளிக்கும் அமைப்பின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு.கணேசன் நன்றியுரை ஆற்ற நாட்டு பண்ணுடன் நிகழ்வு நிறைவுப் பெற்றது. நிகழ்வு சிறப்பாக நடைப்பெற மாவட்ட பொருளாளர் திரு. ஆறுமுக கடவுள் கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள் உதவினர். விழாவில் 40 ஆசிரியர்கள் 50 மாணவிகள்  பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.