Sunday, July 21, 2024

தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியீடு !!!

GO NO : 127 , Date : 16.07.2924 - Download here

Paper News

 


Vidyarthi Vigyan Manthan (VVM 2024) - A Digital Based and Largest Science Talent Search Examination for Emerging India !!!

 வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2024

 இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2024 

 வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை 

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் , விபா , என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம், அல்லது வீட்டில் இருந்தவாறே  இத்தேர்வை இணைய வழியில் மாணவர்கள் எழுதலாம். இந்தியா முழுவதும் இத்தேர்வை மாணவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது.   23-10-2024 (புதன் கிழமை) மற்றும்  27-10-2024 (ஞாயிற்றுக்கிழமை ) ஆகிய இரு நாட்கள்   இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது.

 இந்த  திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் ,  மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும். முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும்.


 தேர்வுக் கட்டணம்                   :     200 ரூபாய்

 விண்ணப்பிக்க கடைசி தேதி  :     15-9-2024

 தேர்வு நடைபெறும் நாள்         : 23-10-2024 (புதன் கிழமை)  மற்றும்

                                                               27-10-2023 (ஞாயிற்றுக்கிழமை ) 

தேர்வு நேரம்: 90 நிமிடங்கள்(1.30 மணி நேரம்)

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை  எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.

( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்)

 யாரெல்லாம் தேர்வு எழுதலாம்? 

Ø  6ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம்.

Ø  6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.

 தேர்விற்கான பாடத்திட்டம்: 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு,  Dr .சாந்தி சொரூப் பட்நாயக் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 

 எவ்வாறு பதிவு செய்வது? 

www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

 பள்ளி வழியாக: 

பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.

 தனித்தேர்வர்களாக :

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள்  இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

 பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்: 

பள்ளி அளவில்:

பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 மாவட்ட அளவில்: 

மாவட்ட அளவில் 

(6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Ø  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Ø  மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  

அழைத்துச் செல்லப்படுவர்.

 மாநில அளவில்: 

மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். 

அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.

Ø  இதில் தேர்வு செய்யப்படும் 120  மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.

Ø  120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு   ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.

 தேசிய அளவில்: 


Ø  ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.


Ø  தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.


 தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய்   பாஸ்கரா உதவித்தொகை வழங்கப்படும்.


மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று முதல் 3 வாரங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.


Ø  தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல் , இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000ரொக்கப்பரிசு வழங்கபபடும்.


Ø  மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.


Ø  அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.


இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு..

  கண்ணபிரான், 

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன், cell:8778201926  

 Email:vvmtamilnadu@gmail.com





குரு பூர்ணிமா - சிறப்பு கட்டுரை !!!

 குரு பூர்ணிமாஆடி மாதத்தில் வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை வியாசபூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.

வேத வியாசரின் சிறப்புகள் சில :

1.இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என அழைக்கப்பெறுகிறார்.

2. பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.

3.வியாசர் இதிகாசமான மகாபாரதத்தினை எழுதியபின், பதிணென் புராணங்களை எழுதியதாக கூறப்படுகிறது. 

4. வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.

5.உபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் 555 சூத்திரங்கள் கொண்ட பிரம்ம சூத்திரம் நூலை இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.




Saturday, July 20, 2024

திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா !!!

திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில், முப்பெரும் விழா இன்று (20/07/2024) சிறப்புடன் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம்  சார்பாக,  கல்வியறிவு புகட்டிய குருமார்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், அவர்களை நினைவுகூர்ந்து, போற்றி வணங்கும் விழாவான குரு பூர்ணிமா விழாவுடன், கடந்த கல்வியாண்டுவரை அரசுப் பணியில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அவர்கள் சார்பாக மரம் நடுதல் என மூன்று நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக இன்று (20.07.2024, சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சிவாஜி மந்திரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடந்த கல்வியாண்டுடன் ஓய்வுபெற்ற தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவரும், நஞ்சப்பா பள்ளித் தலைமையாசிரியருமான பழனிச்சாமி, முதுகலை ஆசிரியர் மதிவாணன், செல்லப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பழனிசாமி, கவிதாலட்சுமி நகர் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் கற்பகம், போத்தம்பாளையம், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பத்மாவதி, அவிநாசி பதிவு எழுத்தர் ரங்கநாதன் ஆகியோர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும்  பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், குரு பூர்ணிமா விழாவை சிறப்பிக்கும் வகையில்  குரு வணக்கம் நிகழ்வும், மரம் நடு விழாவையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. 

தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலப்  பொதுச் செயலாளர் கந்தசாமி பேசுகையில்...   

"தொன்று தொட்டு பல்லாண்டு காலமாக நமது நாட்டில் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டு வருகிறது. குருவே நல்லவை எவை கெட்டவை எவை என்பதன் வேறுபாட்டை பிரித்துக் கற்பிப்பவர். அவர்கள் கற்பித்தலோடு மட்டுமின்றி சமுதாய உயர்வுக்காக உழைத்தும் உள்ளனர். பல பேரரசர்களின் ஆட்சிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான குருமார்களைப் போற்றும் வகையில்    வேத வியாசரின் அவதார தினமான ஆடி மாத பௌர்ணமி தினத்தை ஆதி குருவாகப் போற்றி வழிபாடு செய்வதே குரு வணக்கம் நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும். சோதனையான நேரங்களில் சமுதாயத்தை வழிநடத்த சரியான நபரை அடையாளம் காட்டுபவர் அவர். சுவாமி வித்யாரண்யர், சமர்த்த ராமதாசர், சாணக்கியர் ஆகியோரை இதற்கு சான்றாகக் கூறலாம்.     நாமும்  இதுபோல குருமார்களின் வாழ்க்கையை முன் மாதிரியாகக்கொண்டு  *ஆசிரியர் என்ற நிலையில் இருந்து குரு என்ற நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ளும் வகையில்* அனைவரும் பணியாற்ற வேண்டும்" எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் முருகன், சாருமதி தேவி, ஆறுமுகம், தண்டபாணி, திருப்பூர் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பிரபு, கோவை மாவட்டத் தலைவர் சனல்ராம், திருச்சி மாவட்டத் தலைவர் ஆறுமுகம் மற்றும்  மாவட்ட நிர்வாகிகள், கல்வி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Sunday, July 14, 2024

CLAT 2025 NOTIFICATION OUT !!!

 *🔹🔸CLAT 2025 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்*

*✍️தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான, CLAT 2025 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (ஜூலை 15) தொடங்குகிறது.*

➤➤.  விருப்பமுள்ளவர்கள் ₹4000 (SC/ST -₹3500) விண்ணப்ப கட்டணமாக செலுத்தி, consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

➤➤. இளநிலை படிப்பிற்கு 45%, முதுகலை படிப்பிற்கு 50% மதிப்பெண்கள் பிளஸ்2-வில் பெற்றிருக்க வேண்டும். 

வரும் டிசம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெறும்.



DSE - பள்ளிக்கல்வித்துறையில் தொடக்கக்கல்வித்துறை போல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தவும் அதில் கூடுதல் தேவை பணியிடங்களை காட்டுதல்,மாவட்டம்-மாவட்டம் கலந்தாய்வில் சொந்த மாவட்ட காலிப்பணியிடங்களை தெரிவு செய்ய அனுமதிக்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கோரிக்கை !!!




Saturday, July 13, 2024

DSE - BT Asst Resultant vaccancy - 13/07/2024

 DOWNLOAD 


மாதந்தோறும் தவறாமல் படியுங்கள்

 
தேசிய ஆசிரியர் குரல்


Click here to read


State Media Team
Desiya Asiriyar Sangam - Tamilnadu 

Pensioner's Guide - Tamil pdf

 Download 



Friday, July 12, 2024

DSE - BT resultant vaccancy - 12.07.2024

 Download 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு ஒரு  சில பள்ளிகளில் கூடுதல் பணியிடங்கள் காட்டப்பட்டுள்ளது....
நன்றி

ITR - வருமான வரி தாக்கல் செய்யப் போறீங்கள. இந்த படிவம் 26AS பற்றி தெரியுமா??

 Click Here to Read

நன்றி: The Economic Times தமிழ் 

Circular

 


Tuesday, July 9, 2024