Tuesday, October 1, 2024

TET ISSUE - NCTE தலைவருடன் தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு !!!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) நடத்திய 11 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிந்த தேசிய ஆசிரியர் கல்வி குழுமம், புதுடில்லி, யின் தலைவர் திரு. பங்கஜ் அரோரா அவர்களிடம், தமிழகத்தில் உள்ள, 23.08.2010 க்கு முன்பு நியமிக்கப்பட்ட, TET தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி துன்பப்படுவதையும், இது சார்ந்த  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் விரிவாக பேசினோம். 

தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்தும் பேசப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு நிலுவையில் உள்ளபோது எதுவும் செய்ய இயலாத நிலையினை சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் நிலைமையை போன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள  ஆசிரியர்களின் பிரச்சனைகளையும் கருத்தில் கொள்வதாகவும் அதற்கு நீதிமன்ற வரம்பிற்குட்பட்டு, எந்த வகையில் ஆசிரியர்களுக்கு உதவ இயலுமோ அந்த வகையில் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். நமது கருத்துக்களை பொறுமையுடன் 15 நிமிடங்களுக்கு மேல் கேட்டு உறுதி கூறிய அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தந்த நமது தேசிய அமைப்பான ABRSM அமைப்பு செயலாளர் திரு மகேந்திர கபூர் அவர்களுக்கு நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வில் மாநிலத்தலைவர் திரு. திரிலோகசந்திரன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள், திரு. நீலமேகன், திரு.கிருஷ்ணகுமார், காஞ்சீபுரம் கோட்ட செயலாளர் திரு இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு `14.10.2024க்கு ஒத்திவைப்பு`!!!

 



DEEPAVALI - FESTIVAL ADVANCE APPLY OPTION IN KALANCHIYAM APP

 


தீபாவளி முன் பணம் களஞ்சிய. வலைதளத்தில் தற்போது Apply செய்யலாம்.அதற்கான வழிமுறை

👇👇👇 Video 

https://youtu.be/ovYn-eVxT0g?si=Anm-

Sunday, September 29, 2024

Annual Generalbody Meeting 2024 Resolutions!!

Download 


மாநில பொதுக்குழுக் கூட்டம் - 29/09/2024 - கள்ளக்குறிச்சி!!!

 அனைவருக்கும் வணக்கம் . நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொதுக்கூட்டம் (29/09/2024 ) இன்று சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாநில, கோட்ட மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக திரு ஏ கே டி கோபி ( Retired CEO PA) அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பல்வேறு கருத்துக்களை கூறினார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற TNPSC தேர்விற்கான பயிற்சி மூலம் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆண்டு அறிக்கை, மாநில அளவிலான சந்தா சேகரிப்பு, சங்க சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  சங்க வளர்ச்சி குறித்தும் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.. பொதுக்குழு தீர்மானங்கள் அனைவரின் ஒப்புதலோடும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

பொதுக் குழுக் கூட்ட தீர்மானங்கள் 
















Tuesday, September 24, 2024

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

 


மதிப்பிற்குரிய  

திரு.செந்தில் முருகன் ( V.V.NATIONAL CHAIRS உரிமையாளர் ) அவர்களது உதவியுடன் 

நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

ஈரோடு மாவட்டம் 

சார்பாக

 எனது பள்ளி எனது புனிதத் தலம்

திட்டத்தில் 

ஊ. ஒ. து.பள்ளி,

பெருந்துறை, 

மேற்கு பள்ளி முதல் வகுப்பு குழந்தைகளுக்கான 70 நாற்காலிகள் மற்றும்  15 மேசைகள்

இன்று (23-9-24) வழங்கப்பட்டன,

என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Monday, September 23, 2024

Sunday, September 22, 2024

E - SR DETAILS

 DOWNLOAD 

நண்பர்களே வணக்கம் 


காலாண்டுத் தேர்வு காலம்...


வழக்கமான பள்ளி பாடவேளை / வகுப்புகளில் இருந்து  மாற்றம்...


நேரம் கிடைக்கும் போது தங்களின் பணிப் பதிவேட்டில் பதிவுகளை சரி பார்த்துக் கொள்ளலாம்...


 *E-Sr* முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை *physical SR* ஒரு *முக்கிய* ஆவணம் 👍


பல தலைமை ஆசிரியர்கள் / ஆசிரிய நண்பர்கள் *SR entry* சார்ந்து பல சந்தேகங்கள்...


விடுபட்ட பதிவுகள்...


வாரிசு நியமனம் இல்லாமை...


முறையாக பதிவுகள் இல்லாமல்....


இன்னும் பல..... வினாக்களுக்கு....


பணிப் பதிவேடுகள் 

 *FR 74  (iv)* படி..



1) *பணியாளர்கள்* அவர்தம் பணிப் பதிவேடுகள் *பார்க்கும்* உரிமை உண்டு 

(Xerox copy எடுத்து வைத்துக் கொள்ளலாம்) 


2) *எழுத்துப்பூர்வமாக* கடிதம் கொடுத்து த.ஆ இடம் பணிப் *பதிவேடுகள் சரி பார்க்க* பெற்றுக் கொள்ளலாம்.


3) த.ஆ ... பணிப் பதிவேடுகளின் *இயக்க பதிவேடு* முறையாக பராமரிக்க வேண்டும்.


4) முதல் பக்கம்..

GPF/CPS/TPF No... எழுதுதல்... புகைப்படம்...

இதர விபரங்கள்...

பெயர்...

பிறந்த தேதி....

சொந்த ஊர்/ பிறந்த ஊர்

இரண்டாம் பக்கம்

முதலில் பணியேற்ற விவரம்...

பணியாளர் கையொப்பம்...

தலைமை ஆசிரியர்/ அலுவலகத் தலைவர் கையொப்பம் .... 


5) கல்வி தகுதிகள்...

Degree certificate... பதிவு மற்றும் 

 *உண்மைத் தன்மை* பெறப்பட்ட விவரங்கள்...


6) பணியில் சேர்ந்த பிறகு... உயர் கல்வி பயில முன் அனுமதி விவரம்


7) பணி *நியமனம்* ...

பணி நியமன ஊதியம்...

 *பணிவரன்* முறை...

 *தகுதி காண்* பருவம்... 

பதிவுகள்...


8) *ஆண்டு ஊதிய* உயர்வுகள்...


9) *விடுப்புகள்* ... ML, EL.. UEL PA, LLP with MC, LLP with out MC... Etc

( LLP alone, deduct EL) 


10) மாறுதல் இன் போது பணி விடுப்பு...

பணி ஏற்பு....

அனுபவிக்காத பணி ஏற்பிடைக்காலம் நாட்கள் EL வரவு ( ஆறு மாதத்திற்குள்) 


11) பதவி உயர்வு..

பதவி உயர்வு *தற்காலிக* துறப்பு...


12) பதவி உயர்வில் *பணிவரன் முறை* ...

சில நிகழ்வுகளில் (பணித் தொகுதி மாறினால்) பதவி உயர்வில் தகுதி காண் பருவம்...


13) துறைத் தேர்வு தேர்ச்சி


14) தேர்வு நிலை/ சிறப்பு நிலை ஆணை..

 *தேர்வு நிலை/ சிறப்பு* நிலை ஊதிய நிர்ணயம்

( இரண்டு பதிவு...

 a) தற்போது *DEO (sec)* order மட்டும் வழங்குவார்...

b) சார்ந்த *தலைமை ஆசிரியர் தான் ஊதிய நிர்ணயம் செய்து ஆணை* வழங்குவார் 


( சிலர் தலைமை ஆசிரியர் *ஊதிய நிர்ணயம்* செய்த விவரத்தை பதிவு செய்ய மறந்து விடுகிறார்கள்) 


15) போராட்ட காலம் பதிவு... ஊதிய பிடித்தம் விவரங்கள்..

 *போராட்ட காலம்* முறைப்படுத்தல்...

மீள ஊதியம் பெற்ற விவரம்..

போராட்ட காலம் பணிக்காலமாக முறைப்படுத்தல்...


போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனில்

அன்னார் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் 2002-03, 

2017-2019 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என சான்று...


16) பணிக் காலம் சரி பார்த்தல்...


17) குடும்ப விவரங்கள் பதிவு...


18) பயிற்சிகள்

பாராட்டுச் சான்றுகள்


19) ஊதியக் குழு நிர்ணயம் *2009* ..


தர ஊதியம் மாற்றம் *2011* 


சிறப்பு நிலை தேர்வு நிலை மாற்றம் *2013* ...


 *ஊதியக் குழு 2016* (10/2017) ஊதிய நிர்ணயம் 


20) *தண்டனைகள்* 

17 அ 17 ஆ 17 உ ...

ஊதிய உயர்வு நிறுத்தம் 

திரண்ட பலன் உடன்

திரண்ட பலன் இன்றி...


இவை ☝️ *வழக்கமான* பதிவுகள் ( small recall)


இந்த பதிவின் முக்கிய *நோக்கம்* ☺️


21) *SPF 84* பிடித்தம் ஆரம்பம்... 148 தவணை நிறைவு...


 *SPF 2000* பிடித்தம் 

50/70 விவரம் 

(முன்பெல்லாம் SPF 2000 பிடித்தம் கணக்கீடு இருக்கும் உ.ம் 70 *(1/359)* ...

அதாவது பணியில் இருந்து *ஓய்வு பெற இருக்கும்* மாதத்திற்கு *முன் மாதத்தில்* SPF 2k பிடித்தம் நிறைவு செய்யப்படும் 

May 2038 இல் ஓய்வு எனில் April 2038 last due) தற்போது யாரும் கணக்கீடு செய்வதாக தெரியவில்லை...🤪...


பள்ளி ஆவணங்கள்/ aquittance அடிப்படையில் *எந்த மாதம் முதல் பிடித்தம் என பதிவு* செய்யலாம்...

(இன்றைய தேதியில் *விடுபட்ட பதிவு* என பதிவு செய்யலாம்) 

 *SPF 84* எனில் 20/- எந்த மாதத்தில் *148* தவணைகள் நிறைவு என்ற விவரம் காட்டாயம் இருக்க வேண்டும்...


22) *FBF/FSF* தற்போது 110 பிடித்தம் செய்யப்படுகிறது...

பணியில் சேர்ந்தது *முதல் பிடித்தம்* ...

முதலில் பிடித்தம் பற்றிய விவரம் *இல்லாவிட்டாலும்* ...


தற்போது *1/9/2021* முதல் *₹110* /- பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரம் இருக்க வேண்டும்...


(இது *term insurance* போல் தான்..

பணியில் இருக்கும் போது மரணம் எனில் மட்டும் பலன்...)


23) *NHIS 2021* ...

தற்போது 295+5 பிடித்தம் விவரம்... 

( மருத்துவ சிகிச்சைக்கு NHIS card/ e Card

இரண்டும் இல்லை எனில்

annexure vi + three months pay slip தான் தேவை) அதனால் NHIS deduction SR entry முக்கியத்துவம் பெறுவதில்லை....


24) *வாரிசு நியமனம்* ...

இதை அனைத்து *பணியாளர்களும் கட்டாயம் செய்திடல்* வேண்டும்...

ஏற்கனவே பதிவு எனில் *updation* செய்து கொள்ளலாம்...


 *ஐந்து இனங்கள்* Nominee.... for


a) GPF/CPS

b) SPF 84/ SPF 2000

c) FBF/FSF

d) DCRG/ Pension (GPF) 

e) EL/UEL


SR இல் இதற்கென கூடுதல் தாள்கள் தரப்பட்டு இருக்கும்...


 *Nominee change/ மாற்றம்* தேவை எனில் முந்தைய பதிவை அடிக்க வேண்டாம்...

தற்போதைய தேதியில் பதிவு செய்யும் போது

 *முந்தைய பதிவு தானாக* காலாவதியாகிவிடும்...


25) *2017-18 இல் IFHRMS E-SR* பணிக்காக நாம் எல்லோரும் update செய்தோம்... 

இருப்பினும் *தற்போது* வரை nominee/வாரிசுதாரர் முறையாக பதிவுகள் இல்லாமல் *எதிர்பாராத நிகழ்வு* ஏற்படும் போது...


பணியாளர் குடும்பத்திற்கு *த.ஆ* உரிய பணப் பலன்களை பெற்றுத் தர *தயாராக* இருந்தாலும்...


முறையான பதிவுகள்/ வாரிசு நியமனம் இல்லாமையால் 

 *தேவையற்ற சிரமங்கள்* /

காலதாமதங்கள் / நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகிறது 😞


 *பள்ளி/மாணவர் நலன்* சார்ந்து நாம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தாலும்...


 *நமக்கான பணியையும்* நேரம் கிடைக்கும் போது செய்து கொள்வோம் ☺️...


 *சிறு சிறு திட்டமிடல்* 

வளமான / மகிழ்ச்சியான தருணங்கள்...


SR abstract, (school audit - useful) 

SR entry single page, 

SR entry model govt letter ( eng, tam) 

SPF 2K

FBF/FSF latest GO...

44 pages...

 *Single PDF* attached

Kindly check it...


தகவலுக்காக...

 க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம் 625702

மதுரை மாவட்டம் 

பதிவு நாள் 22/9/24

Wednesday, September 18, 2024

NAS 2024 Tentative Schedule!!!

 தேசிய அளவிலான அடைவுத்தேர்வு NAS - National Achievement Survey நடைபெறும் உத்தேச தேதி மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் குறித்து SCERT இயக்குநர் செயல்முறைகள்.

Monday, September 16, 2024

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு !!!

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் இன்று (16/09/2024) தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொடக்ககல்வி இயக்ககம் அலுவலகத்தில் சந்தித்து மாணவர்கள் நலன் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் உள்ளடக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 ஒவ்வொரு கோரிக்கையும் விரிவாக பேசப்பட்டது.குறிப்பாக ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியம் பாதிக்கப்பட்ட 20 ஆசிரியர்களின் கோரிக்கைகள் இயக்குனர் அவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது

 இயக்குனர் அவர்களும் கனிவோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்து இயக்ககம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் செய்து ஆசிரியர்கள் நலனை காப்பாற்றுவதற்காக அனைத்து உதவிகளையும் விரைவாக செய்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்பதனை மகிழ்வோடு தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.