Thursday, May 23, 2024

MSHM TO BEO PANEL - FINAL LIST RELEASED!!!

 வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் !!! (23.05.24)

Download 

31.05.2024 - க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

31.05.2024க்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 DSE - Book and Note Distribution Proceedings


Download here

Saturday, May 18, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம்- பகுதி 7 !!!

 அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருச்சாளக்கிராமம், நேப்பாளம்  

முக்திநாத் நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.

முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர். திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள். தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர். 

மூலவர் – ஸ்ரீமூர்த்தி – (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பூ மூர்த்தி)

கண்டவர்கள் – ப்ரம்மா, ருத்ரர், கண்டகி

தாயார் – ஸ்ரீதேவி நாச்சியார்

விமானம் – கனக விமானம்

தீர்த்தம் – ஸ்ரீசக்ர தீர்த்தம்

ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம். பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.






மனமொத்த மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!!

 Download 


Friday, May 17, 2024

Counseling Update - 17/05/2024

 👉 மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க  தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம்

👉 25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!


Thursday, May 16, 2024

DEO to CEO Promotion Panel - May 24!!!

 Download

Say YES to Life


Say NO to Drugs

Counseling Update - 16/05/2024











பூமியே நமக்கு ஆதாரம் !


நெகிழியே அதற்கு சேதாரம் !!


தவிர்ப்போம் நெகிழியை !!!

Wednesday, May 15, 2024

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) சார்ந்த முன் மொழிவுகளை இனி IFHRMS வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் - கருவூல கணக்குத் துறை ஆணையர் உத்தரவு!!!

 Download 

Say YES to Life


Say NO to Drugs

Paper News

 























EMIS பணிகள் - ஜீன்‌ மாதம் முதல் முதல் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொள்வர்.

- நடுநிலைப்பள்ளிகளில் 8500 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒப்பந்த அடிப்படையில் கல்வியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுடன் ஆய்வக உதவியாளர்கள் EMIS பணிகளை மேற்கொள்வார்கள்.
- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் 6,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
- உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் EMISக்கான தரவு நுழைவுப் பணியை மேற்கொள்வார்கள்.
- இவர்களுக்கு தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகள் ஒதுக்கப்படும்.அதில் ஆரம்பப் பள்ளிகளும் அடங்கும்.
- இவர்கள் பள்ளிகளின் EMIS பணியை மேற்கொள்வார்கள்.
- ஜூன் முதல் வாரத்தில் இருந்து இப்பணிகள் செயல்படத் தொடங்கும்.

ஜெ.குமரகுருபரன்
பள்ளிக் கல்வித் துறை செயலாளர்

Monday, May 13, 2024

Navodaya Schools Vaccancy - Full Details!!!

 நவோதயா வித்யாலயா வேலை வாய்ப்பு; 1377 பணியிடங்கள்

 Jawahar-Navodya-759

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உதவி பிரிவு அலுவலர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1377 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2024

Female Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 121

கல்வித் தகுதி: B.Sc Nursing படித்திருக்க வேண்டும்

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 44900 - 142400

Assistant Section Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 23 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35400 - 112400

Audit Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: பி.காம் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35400 - 112400

Junior Translation Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35400 - 112400

Legal Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 23 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35400 - 112400

Stenographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 23


கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25500 - 81100

Computer Operator


காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: BCA/B.Sc. (Computer Science/IT)/ BE/B.Tech (Computer Science/IT) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25500 - 81100

Catering Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 78


கல்வித் தகுதி: Bachelor's Degree in Hotel Management படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25500 - 81100


Junior Secretariat Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 381

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19900 - 63200

Electrician Cum Plumber

காலியிடங்களின் எண்ணிக்கை: 128

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrician/ Wireman பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19900 - 63200

Lab Attendant


காலியிடங்களின் எண்ணிக்கை: 161

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18000 - 56900

Mess Helper

காலியிடங்களின் எண்ணிக்கை: 442

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18000 - 56900

Multi Tasking Staff

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18000 – 56900

வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nvs.ntaonline.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://exams.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Saturday, May 11, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 6 !!!

 அருள்மிகு ஶ்ரீ கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் 
தாந்தோன்றிமலை கரூர்

இத்திருக்கோவில் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிமீ தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது. இந்த குடைவரைக்கோயில் கிழக்கிலிருந்து மேற்காக அரை பர்லாங் தூரம் பரவியுள்ள குன்றின் மேல் புறம் அமைந்துள்ளது. இக்குன்று மேல் புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது. கருவறையின் குகைக்கு மேலே மலை மீது கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாய் பிரகாசிக்கிறது. கருவறை 19 அடி 6 அங்குலத்திற்கு 14 அடி 6 அங்குல அளவில் குடையப்பட்டுள்ளது. இதன் உயரம் 9 அடி 9 அங்குலம் ஆகும். கருவறையின் நடுவில் உயர்ந்த மேடை உள்ளது. மேடையின் கீழ்ப்புறம் கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். இம்மேடையின் மூன்று புறங்களிலும் 4 அடி அகலம் நடைபாதை பள்ளமாகச் செதுக்கப்பட்டுள்ளது. குடைவரையின் முன்பாக காணப்படும் மகாமண்டபம் மற்றும் சன்னதிகள் பிற்காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை ஏறத்தாழ கி.பி.13-14ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கோயிலின் எதிரில் குளம் உள்ளது.

இக்குன்றின் மேல் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் மேற்கு நோக்கி நின்ற நிலையில் ஶ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பெருமாள் லட்சுமியைத் தனது மார்பில் தாங்கிய நிலையில் பிரம்மாண்ட வடிவுடன் காணப்படுகிறார். தாயாருக்கு தனியாக சன்னதி இல்லை. திருமண பரிகார ஸ்தல ங்களில் இது ஒரு முக்கிய ஸ்தலமாகும்.




PG ASST VACANCY DETAILS - JUNE 24

 THANJAVUR - CLICK HERE

ARIYALUR - CLICK HERE