Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, July 5, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 14 !!!

 அருள்மிகு வானமாமலை பெருமாள் கோவில் , நாங்குநேரி , நெல்லை மாவட்டம்

(ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம்)


திருவரமங்கை என்னும் வானமாமலை என்று அழைக்கப்படும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, திருவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரி எனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.
இக்கோயிலில் வானமாமலைப் பெருமாள், திருவரமங்கை தாயார் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன.
இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைலக்காப்பு சாற்றும் நிகழ்வு நடைபெறும். அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணெயை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னரான காரிக்கு குழந்தைப் பேறு இல்லாததால், திருக்குறுங்குடிக்குச் சென்று வேண்டினார். மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் எப்படிபட்ட குழந்தைவேண்டும் என்று வினவினார். அதற்கு காரி தங்களைப்போன்ற ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார். அவ்வறே ஆகும் என உரைத்த நம்பிராயர், இங்கிருந்து கிழக்கே சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும். அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருப்பான். அந்த இடத்தில் அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். அவன் கேட்டதை அருளுவான் என்றார். அதன்படி அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே மன்னன் அகழ்ந்தபோது, அங்கே வானமாமலைப் பெருமாள் கிடைத்தார். நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவரை நிலையாட்டி அவருக்கு கோயில்கட்டி அவரை வழிபட்டார். அதன்பிறகு நம்பிராயர் அருளியபடியே காரி மன்னருக்கு மகனாக நம்மாழ்வார் பிறந்தார்.

கோவில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

மேலும் கோயிலில் ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னிகளில் உள்ளனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களும், கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர். இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடலின் அம்சமாகவும் சாபம் நீக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

 இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.








Saturday, June 29, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 13 !!!

அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் ,திருமோகூர் , மதுரை


திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.

இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகின்றன.
நம்மாழ்வார் இவ்வூர் கோயில் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்ற சுரனைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்,
காள மேகத்தை அன்றி மற்று ஒன்று இலம் கதியே

இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர்.





Saturday, June 22, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 12 !!!

 அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் கோவில், திருக்கண்ணமங்கை , திருவாரூர் மாவட்டம் 

மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.
இக்கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஊரில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் திருவாரூர் நகரிலிருந்து  சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் ஆழ்வார்கள் சன்னதி, அபிசேகவல்லித் தாயார் சன்னதி, வசந்த மண்டபம், ஆண்டாள் சன்னதி, ஹயக்ரீவப்பெருமாள் சன்னதி, மணவாளமாமுனிகள் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன் பட்சிராசன் சன்னதி உள்ளது. சாலையின் எதிர்ப்புறம் கோயிலுக்கு எதிரே அனுமார் சன்னதி உள்ளது.

மூலவர்
பக்தவத்சலப் பெருமாள். இவர் பக்தராவிப் பெருமாள் என்றும் அறியப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

தாயார்
அபிஷேகவல்லித் தாயார்.

விமானம்
உட்பல விமானம்.

தல விருட்சம்
மகிழம்

தீர்த்தங்கள்
தர்சண புஷ்கரணி தீர்த்தம்

திருவிழா
ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமித் திருவிழா, இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும்.

திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தினை, பாடியுள்ளனர்.

இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினாறாவது திருத்தலம்.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.





Friday, June 14, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 11 !!!

 அருள்மிகு ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில் திருபூட்குழி, காஞ்சிபுரம் 

திருப்புட்குழி  ஶ்ரீ விஜயராகவ பெருமாள் கோயில்  108 வைணவத் திவ்ய திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.
நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். விமானம் விஜயகோடி விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.
இராமாயணத்தில் சடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி ( பறவை + குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.

ஜடாயுவுக்கு மோட்சமளித்த இராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே. இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி 'வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8ஆம் உற்சவத்தன்று அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.







Saturday, June 8, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 10 !!!

 திரு ஆயர்பாடி, மதுரா மாவட்டம், உத்திரபிரதேசம்

ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. துவாபரயுகத்தில் திருமாலின் அவதாரமான கண்ணன் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறு சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவி ருக்மணி தேவி, சத்திய பாமா ஆகியோர். இதன் விமானம் ஹேம கூட விமானம் என்னும் அமைப்பினைச் சேர்ந்தது.
இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது.புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன.

சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.



Friday, May 31, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 9 !!!

 அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் திருக்கோயிலூர் 

உலகளந்த பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம்திருக்கோவிலூர் மாநகரில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார்.[கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் மாநகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மகாபலி என்னும் அசுர அரசன் தான தர்மத்தில் சிறந்தவன் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக்கொள்கிறான்.

அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.

மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.

விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இராஜகோபுரம் பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. என்றாலும் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.

பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
















Saturday, May 25, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 8 !!!

  அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் கோயில் திருவெள்ளறை -  திருச்சி


இத்திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற திருநாமம்த்தில் எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். சக்கரம்- ப்ரயோக சக்கரம்.

மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர ஏழு மூலவர்கள் உள்ளனர். மேலே பெருமாளின் வலது பக்கம் சூரியனும் இடது பக்கம் சந்திரனும் பெருமாளுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே பெருமாளின் வலது பக்கம் கருட பகவானும் இடது பக்கம் ஆதிசேஷனும் மனித ரூபத்தில் நின்றுக்கொண்டு பெருமாளை சேவித்த படி இருக்கின்றனர். கீழே அமர்ந்தபடி பெருமாளின் வலது பக்கம் மார்க்கண்டேய மஹரிஷி மோட்சத்திற்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார் இடது பக்கம் பூமாதேவி தாயார் உலக நன்மைக்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் மூலவர் பெருமாள் பெரிய உருவத்துடன் இருக்கிறார். அவருக்கு கீழே ஒரே சிம்மாசனத்தில் உற்சவர் செந்தாமரைக் கண்ணனும் பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையான பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தக்ஷிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். இத்தல பெருமாளை பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் இந்த கோயில் ஆக்கம் பெற்றுள்ளதை அவர்கள் காலத்தின் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. மதுராந்தக உத்தம சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டுகளில் இந்த கோயில் "பெரிய ஸ்ரீ கோயில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும். இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில் "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இந்த கிணற்றின் பக்கசுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது.




Saturday, May 18, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம்- பகுதி 7 !!!

 அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருச்சாளக்கிராமம், நேப்பாளம்  

முக்திநாத் நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.

முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர். திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள். தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர். 

மூலவர் – ஸ்ரீமூர்த்தி – (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பூ மூர்த்தி)

கண்டவர்கள் – ப்ரம்மா, ருத்ரர், கண்டகி

தாயார் – ஸ்ரீதேவி நாச்சியார்

விமானம் – கனக விமானம்

தீர்த்தம் – ஸ்ரீசக்ர தீர்த்தம்

ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம். பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.






Saturday, May 11, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 6 !!!

 அருள்மிகு ஶ்ரீ கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் 
தாந்தோன்றிமலை கரூர்

இத்திருக்கோவில் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிமீ தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது. இந்த குடைவரைக்கோயில் கிழக்கிலிருந்து மேற்காக அரை பர்லாங் தூரம் பரவியுள்ள குன்றின் மேல் புறம் அமைந்துள்ளது. இக்குன்று மேல் புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது. கருவறையின் குகைக்கு மேலே மலை மீது கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாய் பிரகாசிக்கிறது. கருவறை 19 அடி 6 அங்குலத்திற்கு 14 அடி 6 அங்குல அளவில் குடையப்பட்டுள்ளது. இதன் உயரம் 9 அடி 9 அங்குலம் ஆகும். கருவறையின் நடுவில் உயர்ந்த மேடை உள்ளது. மேடையின் கீழ்ப்புறம் கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். இம்மேடையின் மூன்று புறங்களிலும் 4 அடி அகலம் நடைபாதை பள்ளமாகச் செதுக்கப்பட்டுள்ளது. குடைவரையின் முன்பாக காணப்படும் மகாமண்டபம் மற்றும் சன்னதிகள் பிற்காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை ஏறத்தாழ கி.பி.13-14ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கோயிலின் எதிரில் குளம் உள்ளது.

இக்குன்றின் மேல் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் மேற்கு நோக்கி நின்ற நிலையில் ஶ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பெருமாள் லட்சுமியைத் தனது மார்பில் தாங்கிய நிலையில் பிரம்மாண்ட வடிவுடன் காணப்படுகிறார். தாயாருக்கு தனியாக சன்னதி இல்லை. திருமண பரிகார ஸ்தல ங்களில் இது ஒரு முக்கிய ஸ்தலமாகும்.




Thursday, May 9, 2024

அட்சய திருதியை - சிறப்புத் தொகுப்பு !!!

 அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறை அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

"அட்சயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

சில குறிப்பிட்ட கோவில்கள் அட்சய திருதியை நாளன்று வழிபட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன

  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடுதல்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள் தரிசனம்.
  • கும்பகோணம் பெரிய தெருவில் பதினாறு பெருமாள்களும் ஒருசேர தரும் தரிசனம் காணுதல்.
  • திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தல்,
  • சேலம் மாவட்டம், எட்டிக்குட்டைமேடில் உள்ள பதினாறு லட்சுமி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவிலில் சிறப்பு பூஜை, சிறப்பு அன்னதானம், திருக்கோயில் வரும் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருள் வழங்கப்படும்.

    முக்கியத்துவம்

    • அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
    • திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
    • வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
    • பொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.
    • காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.
    • பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.
    • வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
    • மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர். இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.
    • வங்காளத்தில், அட்சய திருதியை நாளில், "அல்கதா" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.
    • இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.
    • அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
    • செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.


















______________________________________________________________________________________________________________________________________________________________________



Saturday, May 4, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 5 !!!

 

அருள்மிகு ஶ்ரீ பூவராகசுவாமி கோயில் ஶ்ரீமுஷ்ணம்


 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூவராக சுவாமி  கோவிலில் 10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் திருப்பணிகள் இருந்தன. பின்னர் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரால் விரிவாக்கபட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்றாலயங்களையும் குளத்தையும் உள்ளடக்கி கருங்க்கல்லாலான பெரிய மதில் சுவர் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் ஏழு நிலை இராஜகோபுரம் உள்ளது.

கோயிலில் தினசரி ஆறுகால பூசைகளும், ஆண்டு விழாக்கள் மூன்றும் நடத்தப்படுகின்றன. அவற்றில் தேர் திருவிழா, தமிழ் மாதமான வைகாசியில் (ஏப்ரல்-மே) நடத்தப்படுகிறது. இது மிக முக்கியமான விழாவாகும். இந்த திருவிழாவானது பிராந்தியத்தின் சமய நல்லினக்கத்தைக் குறிக்கிறது - தேரில் கட்டப்படும் கொடி முஸ்லிம்களால் வழங்கப்படுகிறது; அவர்கள் கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டுவந்து மசூதிகளில் அல்லாவுக்கு வைக்கிறார்கள். இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அர்த்த மண்டபம் வரை முஸ்லிம்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட சில கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
இரண்யாட்சன் என்றொரு அசுரன், பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் சிறை வைத்து விடுகிறான். இந்தப் பூமகளைக் காக்க திருமாள் பன்றி உருவில் தோன்றிக் பாய்ந்து அரக்கனைக கொன்று பூமாதேவியை மீட்கிறார். அந்த அரக்கனின் வியர்வைத் துளி விழுந்து இத்தலத்தில் குளம் உருவானது என்கின்றனர். இறக்கும் தருவாயில் அரக்கன் தன் திசையை நோக்குமாறு கூறுகின்றான். இதனால் இத்தலத்தில் உள்ள வராகர் அவனது ஆசையை நிறேவேற்ற தன் முகத்தை தெற்கு நோக்கி திருப்பியபடி இருக்கிறார். அதேசமயம் அவரது உடல் பகுதி மேற்கு நோக்கியபடி உள்ளது. மேலும் பூதேவி கோரியபடி பூவராகர் தன் கைகளில் சங்கு சக்கரத்தை வைத்துக்கொண்டு காட்சியளிக்கிறார்.ஒரு நவாப் தனக்கிருந்த நோய் நீங்க யக்ஞ வராகரை வேண்டிக் கொள்ள, அப்படியே நோய் நீங்க, அதன்பின் அந்த நவாப் பூவராக சாஹேப் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு கூறுகிறது. அவர் ஏற்படுத்திய மானியம் இன்றும் இருக்கிறது, இந்தக் கிள்ளையிலே. சமுத்திர தீரத்திற்குச் செல்லு முன் யக்ஞ வராகர் முகமதியர் பிரார்த்தனை ஸ்தலமான மசூதி பக்கம் போய் அவர்கள் செய்யும் மரியாதைகளையும் ஏற்றுக் கொள்கிறார்.
வைணவத் தலங்களுக்குள் இத்தலம் ஒரு தனிச்சிறப்பானது. சுயம்புலிங்கம் போல, சிற்றுளி கொண்டு செய்யப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை திருரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானமாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். அதில் ஒன்றாக இக்கோயில் உள்ளது.
இக்கோயில் பிரும்மாண்டமான கோயில். மூன்று மதில்களால் சூழப்பட்டிருக்கின்றது. இன்று இருப்பது இரண்டு மதில்களே. மூன்றாவது மதில் சிதைந்து அதன் அடையாளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. கோயில் வாயிலை 150 அடி உயரமுள்ள ஒரு ராஜகோபுரம் அழகு செய்கிறது. இக்கோபுர வாயிலிலே துழைத்த உடனே கோபுரத்தின் மேலே கிழக்கு நோக்கியவராய் வேங்கட வாணன் இருப்பதைக் காட்டுவர். இத்தலத்தில் கோபுரத்தில் உள்ள வேங்கடவனை முதலில் தரிசித்த பின்னரே பூவராகனை சேவிக்க வேண்டும் என்பது இத்தலத்தின் சம்பிரதாயம் ஆகும்.
இது கடலூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த இரயில் நிலையம், 20 கிமீ தொலைவில் உள்ள விருத்தாச்சலம் ஆகும். இதன் கிழக்கில் சிதம்பரம் 36 கிமீ; மேற்கில் காட்டுமன்னார்கோயில் 25 கிமீ; வடக்கில் விருத்தாச்சலம் 20 கிமீ; தெற்கில் ஜெயங்கொண்டம் 24 கிமீ; கும்பகோணம் 53 கிமீ தொலைவில் உள்ளது.



























Friday, April 26, 2024

சனிக்கிழமை - ஆலய தரிசனம் - பகுதி 4 !!!

                                     வியக்க வைக்கும்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு (நாகர்கோவிலில் இருந்து சுமார் 26 கிமீ) எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.

நம்மாழ்வார் இவ்வூர்க் கோயில் பெருமாளை ‘வாட்டாற்றான்’ என்று குறிப்பிடுவதால் இந்த ஊரின் பழங்காலப் பெயர் வாட்டாறு என்பது தெளிவாகிறது. எனவே, சங்ககால அரசன் வாட்டாற்று எழினியாதன் இந்த ஊரினன் என்பதை உணரமுடிகிறது.
நம்மாழ்வார் இவ்வூர்க் கோயில் பெருமாளை ‘வாட்டாற்றான்’ என்று குறிப்பிடுவதால் இந்த ஊரின் பழங்காலப் பெயர் வாட்டாறு என்பது தெளிவாகிறது. எனவே, சங்ககால அரசன் வாட்டாற்று எழினியாதன் 
இந்த ஊரினன் என்பதை உணரமுடிகிறது.

கருவறைக்கு முன் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்டது ஆகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு வாக்கில் இம்மண்டபம் அமைய வீரரவி ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக் கூடாது என்பது தொன்மரபு.

கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.

பரந்தாமன் இங்கே தமது பாம்புப் படுக்கையில் சயனித்தவாறு காட்சியளிக்கிறார் மேலும் அவரது தரிசனம் மூன்று வாசல்கள் வழியாக பக்தர்களுக்குக் கிடைக்கப்பெறுகிறது. சன்னிதிக்குள் ஐயன் ஆதிகேசவ பெருமாள் அருகில் பரமசிவன் வீற்றிருப்பதையும் பக்தர்கள் காணலாம். பல தீபலக்ஷ்மிகள் இங்கே வீற்றிருந்தாலும், ஒவ்வொன்றும் ஒரே போல் இருக்காமல் வேறுபட்டு காணப்படும்.

இங்கிருக்கும் ஒற்றைக்கல் மண்டபம் (ஒரே கல்லாலான பெரிய கூடம்) ஒரே கல்லால் செய்யப்பட்டதாகும், அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமம் கொண்ட பாறையாகும், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாகும். மேலும் ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதர் மற்றும் ரதி தம்பதியர், லக்ஷ்மணர் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் மிகவும் அற்புதமாக அழகுடன் செதுக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும். கோவிலை சூழ்ந்து சுவரில் வரையப்பட்டிருக்கும் வண்ண வண்ண சித்திரங்களுக்கும் இந்தக்கோவில் பெயர் பெற்றதாகும்.

மேலும் இக்கோவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலைவிட பழமையானதாகும். இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் கட்டிடக்கலையை ஒரு மாதிரியாகக்கொண்டே திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது. ஆழ்வார்களில் தலை சிறந்தவரான நம்மாழ்வார் அவர்கள் ஆதிகேசவசுவாமியைப் புகழ்ந்து 11 பாசுரங்களை இயற்றியுள்ளார்.

பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் என்பது 'மிகவும் முக்கியமான நண்பனைக்' குறிப்பதாகும். தலபுராணங்களின் கூற்றின் படி பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் கேசி என்ற பெயருடைய அரக்கனை வீழ்த்தியதாக ஐதீகம். அரக்கனின் மனைவியானவள் கங்கை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் தேவதைகளை வணங்கி ஒரு பெரிய பிரளயத்தையே வரவழைத்து விட்டாள். ஆனால் இது ஒரு விதத்திலும் பயனளிக்கவில்லை மேலும் அவள் ஈசனிடம் சரணடைந்து விட்டாள். இப்படியாக வட்டமாக நதிகள் இந்த இடத்தை சூழ்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு திருவட்டாறு என்ற பெயர் அமைந்தது.

 இந்தக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களான பால் பாயாசம் (பால் அமுது), அவல் மற்றும் அப்பம் மிகவும் பெயர் பெற்றதாகும் மற்றும் சுவை நிறைந்ததாகும். திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ளதைப்போலவே இங்கே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.