Friday, April 4, 2025

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை சௌராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அ|மி ஸ்ரீ மீனாட்சி சுரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.










DEE - ANNUAL EXAMINATION!!!

 


UDISE + பணிகளை 09.04.2025க்குள் முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!!!

 Download 

ஈரோடு மாவட்ட செய்திகள்!!!

ஈரோட்டில் 03.04.2025 அன்று FOTA -  GEO மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி அவர்களின் எழுச்சியுரை  💪🏻💐👌🏻



Paper News

 

















Thursday, April 3, 2025

FATO - GEO வில் தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு!!!

அனைவருக்கும் வணக்கம். இன்று (03/04/2025) போட்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர வாழ்வாதார 10 அம்ச கோரிக்கைகளை மீட்டெடுக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் 36+  மாவட்டங்களில் மாநில ,         கோட்ட , மாவட்ட , வட்டார பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதிக மாவட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஆசிரியர் சங்கத்தின் கரங்களை வலுப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்...


மாநில மையம்
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு




Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

 Download 

TET CASE UPDATE!!!

 ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்றதை அடுத்து `தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது` உச்ச நீதிமன்றம்!!!




TET FOR MINORITY SCHOOLS!!!

 02/04/2025 சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு  சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET அவசியம் என தீர்ப்பு வழங்கியுள்ளது !!!

Download 

Wednesday, April 2, 2025

Tuesday, April 1, 2025

கடிதம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டம், ஆரணியில் 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கக்கோரி தேர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கடிதம்.




TNPSC NOTIFICATION !!!

 குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.


துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.





Paper News

 




Monday, March 31, 2025

April 2025 Diary

ஏப்ரல் 2025 --- IMPORTANT EVENTS 

03.04.2025 - FATO GEO மாலை நேர  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் 


ஏப்ரல் -2025 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்


14-04-2025 - திங்கள் - அம்பேத்கார் பிறந்தநாள்


17-04-2025 - வியாழன் - 

பெரிய வியாழன்


20-04-2025 - ஞாயிறு - ஈஸ்டர்


ஏப்ரல் -2025

அரசு விடுமுறை நாட்கள்


10-04-2025 - வியாழன் 

மகாவீர் ஜெயந்தி


14-04-2025 - திங்கள் 

தமிழ் வருட பிறப்பு


18-04-2025 - வெள்ளி 

புனித வெள்ளி


தேர்வுகள் விவரம்


1 - 3ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)

(முற்பகல் 10.00 - 12.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ் 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்


4 & 5 ம் வகுப்புகள் (திருத்தப்பட்டது) 

(பிற்பகல் 2.00 - 4.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்


15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்


17-04-2025

 (வியாழன்) - சமூக அறிவியல்

 

18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம்


6-9 வகுப்பு தேர்வு


08-04-2025 -- தமிழ்

 

09-04-2025 - ஆங்கிலம்

 

16-04-2025- கணக்கு

 

21-04-2025 - அறிவியல்

 

22-04-2025 - உடற்கல்வி


23-04-2025 -சமூக அறிவியல் (6,7)


24-04-2025 -சமூக அறிவியல் (8,9)

திருப்பூர் மாவட்ட செய்திகள்!!!

தொடர் போராட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து…
தேசிய ஆசிரியர்  சங்க  மாநில உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் முடிவு.


தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்கள் நலன் சார்ந்து குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தேசிய ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. 


தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில், மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம், திருப்பூர், பல்லடம் சாலையிலுள்ள தனியார் அரங்கில் இன்று (31.03.2025, திங்கட்கிழமை) நடைபெற்றது. மாநிலத் தலைவர்  திரிலோகச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் கந்தசாமி,  பொருளாளர் திருஞானகுகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்றோர் பிரிவின் மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். பல மாவட்டங்களைச் சேர்ந்த மாநில  அளவிலான சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


அதன்படி...


தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்த ஆசிரியர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை உடனடியாக மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை எதிர்வரும் ஏப்ரல் 24ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அரசு அறிவிக்காத பட்சத்தில் அரசுக்கு எதிராக *ஃபோட்டா-ஜியோ (FOTA-GEO)* சார்பில் அரசுக்கு எதிராக கடுமையான, மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக இரத்து செய்துவிட்டு 01.04.2003க்கு முன்பாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அலுவலர்கள், மதிப்பூதியம் பெற்றுவரும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள், ஊர்ப்புற நூலகர்களையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய அலுவலர்கள் அனைவரையும் நிரந்தர அரசுப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியமும், பணிப்பாதுகாப்பும், சட்டப்பூர்வ ஓய்வூதிய பலன்களையும் வழங்க வேண்டும். மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் இடஒதுக்கீடை 10% உயர்த்திட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வகுப்பறைகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணாக்கர் எண்ணிக்கைக்கு தக்கவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும். தமிழ்நாட்டில் "பி.எம் ஸ்ரீ" பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமார் 400 முதல் 500 பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு செலவு மற்றும் 15,000 ஆசிரியர்களுக்கான ஊதியச் செலவு சேமிப்பாக கிடைக்கும். கிராமப்புற மாணவர்களுக்கு இது அதிக பயனுள்ளதாக இருக்கும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு முன்பு போலவே வழங்க ஆவன செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் கோரும் 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு விரைந்து களையப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்தை உறுதி செய்தல் வேண்டும்.

நிறைவாக  தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.








Friday, March 28, 2025

Dislexia Student Instructions!!!

 Download 1

Download 2

DA Hike!!!

 மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு

மத்திய அரசு அறிவிப்பு

01 ஜனவரி  2025 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.