நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 10 - ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு
இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
பாடத்திட்டம் :
9 ஆம் , 10 ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
தேர்வு நேரம் :
தாள் 1 : காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 வரை தாள் 2 : பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தாள் 1 : கணிதம் 60 மதிப்பெண்கள் தாள் 2 : அறிவியல் மற்றும் சமூக அறிவியல் (30+30) 60 மதிப்பெண்கள்