Thursday, January 29, 2026

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) திருவள்ளூர் மாவட்டம் சார்பாக இன்று (29.01.2026) மாலை கடமை உணர்வு தினம் திருவள்ளூர் DRBCCC இந்து மேல்நிலைப் பள்ளியில் சீரும் சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவில் மாவட்ட தலைவர் திரு. வெ.பரமசிவம் அவர்கள் வரவேற்பு நல்கினார்.

நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு. ம.கோ. திரிலோக சந்திரன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

அப்பொழுது நமது சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

மாவட்ட செயலாளர் திரு. கா . கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். அதன் பின்பு விடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை வரலாறு ஆசிரியர் அவர்கள் கடமை உணர்வு தின சிறப்புரை ஆற்றினார். 

இந்நிகழ்வில்

DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.G.V. ராம்மோகன் மற்றும் கொமக்கம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் M. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வாழும் கலை திருவள்ளூர் குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆனந்த அனுபவ பயிற்சிப் பற்றி திரு. S.S. சீனிவாசன் மற்றும் திரு. S. அனல் சேகர் அவர்கள் விளக்கி அதன் தொடர்ச்சியாகஆசிரியர்களுக்கு எளிமையான பயிற்சிகள் செய்வதற்கு சொல்லித் தரப்பட்டது.

இறுதியாக மாவட்ட பொருளாளர் திரு. மே.சு. பார்த்தீபன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வை மாநில இணை செயலாளர் திரு.தி. நீலமேகன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்விற்கு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட, கோட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் 50 ஆசிரியர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.


















No comments:

Post a Comment