அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
தமிழகம் முழுவதும் மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும், வைணவக் கோயில்களிலும் ஶ்ரீ ஹனுமன்த ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
எல்லையில்லா வளங்களை அருளும் எல்லைக்கரை ஆஞ்சநேயர்
கிருஷ்ணதேவ ராயர்.
இதனையடுத்து ஸ்ரீ வியாசராஜர், திருவரங்கத்திற்கு விஜயம் செய்தார். திருவரங்கம் மக்களும், திருவானைக்காவல் மக்களும் கூடியிருந்தனர். “நான் திருவரங்க க்ஷேத்திரத்தில் இருந்து எனது மூச்சுக்காற்றை இழுத்துப்பிடித்துக் கொண்டு, அதை வெளியிடாமல் நடந்து செல்வேன். எங்கு நான், என் மூச்சுக்காற்றை வெளியிடுகிறேனோ.. அது வரை திருவரங்கத்தின் எல்லைப் பகுதி. மீதமுள்ள பகுதிகள் எல்லாம், திருவானைக்காவல்’’ என்றார். இதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மூச்சுக்காற்றை இழுத்தபடி நீண்ட தூரம் பயணித்தார் வியாசராஜர். அவரின் பின்னால், இரு பகுதி மக்களும், நாட்டு மன்னனும் பின்தொடர்ந்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதி வந்ததும், தான் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சுக்காற்றை விட்டார். “இதுதான் எல்லைப் பகுதி’’ என அறிவித்தார், வியாசராஜர்.
அனைவரும் மகிழ்ந்தனர். இரு பகுதி மக்களும் ஒருவரையொருவர் பரஸ்பரமாக கட்டியணைத்துக்கொண்டனர். கிருஷ்ணதேவராயருக்கோ, மட்டற்ற மகிழ்ச்சி. மேலும், திருவரங்கம் – திருவானைக்காவல் எல்லையை குறிப்பதற்காக, அந்த இடத்தில், “வீர ஆஞ்சநேயஸ்வாமியையும்’’ பிரதிஷ்டை செய்தார், வியாசராஜதீர்த்தர். எல்லையில் இந்த ஆஞ்சநெயஸ்வாமி இருப்பதால், அன்று முதல் “எல்லைக்கரை ஆஞ்சநேயர்’’ என்னும் பெயரும் உருவாயிற்று.மகான் ஸ்ரீ வியாசராஜர் திருவரங்கத்திற்கு வந்தது, எல்லையை குறித்து காட்டியது என அனைத்தும், திருவரங்கம் மற்றும் திருவரங்கப் பெருமாளை பற்றிய “கோயிலொழுகு’’ என்னும் அதிகாரப்பூர்வமான புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.இங்கிருக்கும் எல்லைக்கரை ஆஞ்சநேயர், கேட்ட வரங்களை உடனடியாக கொடுப்பதாக பக்தர்கள் அனுபவப்பூர்வமாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, சித்த பிரம்மை பிடித்தவர்கள் அல்லது பயந்த சுபாவம் கொண்டவர்களுக்கு, வீர ஆஞ்சனேயர் என்னும் பெயருக்கு ஏற்றாற்போலவே, அவர்களுக்கு தைரியத்தை அருளுகிறார்.அனுமன் ஜெயந்தி அன்று, வேத பண்டிதர்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஆஞ்சநேயருக்கு உகந்த ஸூக்தங்களான “பளித்தா சூக்தத்தை’’ பாராயணம் செய்தும், “ஸ்ரீ ஹரி
வாயு ஸ்துதி’’ என்னும் மஹா மந்திரங்களை பாராயணம் செய்தும், விஷேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
No comments:
Post a Comment