திருமங்கை ஆழ்வார் அருளியவை :

1.பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)
2.திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)
3.திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
4.திரு எழு கூற்றிருக்கை ( 47 பாசுரம்)
5.சிறிய திருமடல் (155 பாசுரங்கள்)
6.பெரிய திருமடல் (297 பாசுரங்கள்).

   எனும் ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1351 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார். 

திருமங்கை ஆழ்வாரின்  தனிச்சிறப்புகள் 


♦ பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப் 
பயன்படுத்திக் கொண்டார்.

♦ நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி 
நெறியைப் புலப்படுத்தினார்.

♦ சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார்.

♦ தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி 
பாவத்தை அருளினார்.

♦ அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட 
ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை 
பக்தியின் முதிர்கனிகள் ஆகும்.

♦ மடல் துறைவழி என்னும் ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த 
பெருமைக்கு உரியவர்.

♦ பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி, 
தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும் 
வித்திட்டவர்.

♦ இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில் 
(அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான 
பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர்.

தொகுப்பு
வா ஸ்ரீராம்
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
பெரம்பலூர் மாவட்டம்
செல் : 9786795104