அனைவருக்கும் வணக்கம்.
பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்குள் இருப்பவர்களுக்கு பழைய மீண்டும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தின் உரிமையை இரண்டாம் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் உரிமை இருப்பதாக பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் சார்பாக வாதிடப்பட்டது.
முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான உரிமை காலாவாதியாகிவிட்டது என்பதை அவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல்கான் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு
முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த அன்றே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான உரிமை விதிகளின் படி முடிந்துவிட்டது என வாதிட்டார்கள்.
எனவே விதிகளின் படி முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த அன்றே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான உரிமை காலாவதியாகிவிட்டது என்பதற்கான *எழுத்துப் பூர்வமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க பட்டதாரி ஆசிரியர் சார்பான வழக்குதாரர்களுக்கு நான்கு வார காலம் அவகாசம்* அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து , தற்போதுள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுள் முதுகலை ஆசிரியர் பணியில் ஐந்தாண்டுகள் காலத்திற்குள் பணியாற்றிவிட்டு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி மாறுதல் பெற்றவர்கள் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் எனப் பட்டியலைத் தயார் செய்யவும், ஐந்தாண்டுகளுக்குள் இருப்பவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியின் *உரிமை இருக்கிறது என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் நான்கு வார காலத்திற்குள்* எதிர் தரப்பினர் ஆவணங்களைத் தாக்கல் செய்த பின் அதனைத் தொடர்ந்து இரண்டு வார காலத்திற்குள் ஆவணத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் *அடுத்த விசராணை 45 நாட்களுக்குப் பின் வருகிறது.*
அதுவரை தற்போதுள்ள நிலையே தொடரட்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியராக ஐந்தாண்டுக்கு மேல் பணியாற்றிவிட்டு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணி மாறுதல் பெற்றவர்களுக்கு இனி தொடர வாய்ப்பில்லை.* மீண்டும் முதுகலை ஆசிரியராகச் செல்ல வேண்டிய நிலை மட்டும் தற்போது வரை உறுதியாகிவிட்டது.
ஆனால், உரிய விதிகள் தாக்கல் செய்யப்பட்ட பின் *100% தொடர முடியாது என்ற உறுதியோடு இருப்போமாக!*
வழக்கு முடியவில்லை. வழக்கின் கூடுதல் விசாரணைக்காக இரு தரப்பிலிருந்தும் உரிய ஆதார ஆவணங்களை கோரியுள்ளனர். அதுவரை இன்றைய நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர .... இறுதி தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கவில்லை.
No comments:
Post a Comment