Saturday, October 7, 2023

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (07.lO.2023) காலை 11.00 மணியளவில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வழங்கி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

    நிதி நிலைமை சரியில்லாத காரணத்தினால்தான் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்பட முடியவில்லை.

   உங்களது நியாயமான கோரிக்கைகளை விரைவில் நான் நிறைவேற்றி தருகிறேன் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறார்கள்.

     மாண்புமிகு முதலமைச்சருடான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

     இச்சந்திப்பில் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.த.அமிர்தகுமார்,   முனைவர் கோபாலபுரம்செ.பீட்டர்அந்தோணிசாமி,  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.கே.கணேசன், திரு.மு.சுப்பிரமணி. திரு.அ.மணிராஜ்,மாநில நிதிக்காப்பாளர் திரு.ச.பாஸ்கரன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.வி.இராதாகிருஷ்ணன், திரு.வே.சரவணன்,திரு.மு.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்புடன்,

த.அமிர்தகுமார்,

முனைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்,

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு






No comments:

Post a Comment