Monday, August 14, 2023

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட்(NEET) பயிற்சி துவக்க விழா

செங்கல்பட்டு மாவட்டம்,

தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக அரசுப் பள்ளியில் பயிலும் +2 மாணவ மாணவியர்களுக்கு  இலவச நீட்(NEET)பயிற்சி  ஆரம்பிக்கப்பட்டது.  மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களும் எளிதாக அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் நுழையும் பொருட்டு மேடவாக்கம் - சூர்யாநகரில் உள்ள *CIMS NEET பயிற்சி மையத்தில்* தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக இலவச நீட்(NEET) பயிற்சி துவக்கவிழா நடந்தது.


     இவ்விழாவிற்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர்  திரு.சி.பா. நாராயணன் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும்  சங்கஅறிமுகம் செய்து தலைமை உரையாற்றினார்.

சங்கத்தின் மாநில இணை செயலாளர் திரு.கதிர்வேல், மாநில துணைத் தலைவர் திரு.முருகன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப்பேசினர்.

        

         மாநிலஇணைச்செயலாளர்.திரு.வினோத்குமார்அவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தத்தம் கடமை கடமைகளை உணர்த்தி சிறப்புரை ஆற்றினார்.


          CIMS NEET பயிற்சி  நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி(CEO) திரு.ஜவகர் அவர்கள் நிறுவனத்தின் 

பயிற்சி விவரங்கள் குறித்து விவரித்து  நன்றி உரையாற்றினார்.


        நிகழ்ச்சியை நிறுவனப்பணியாளர்  செல்வி நதியா வர்கள் தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளிக்கரணை, கிழக்கு தாம்பரம், குன்றத்தூர், அஸ்தினாபுரம், கோவிலம்பாக்கம் ஆகிய சுற்று வட்டார பள்ளிகளில் இருந்து பயிற்சி பெற இருக்கும் மாணவ -மாணவியர்கள் மற்றும்  பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

CIMS நிறுவனத்தின் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

  

விழா இனிதே நிறைவுற்றது.


🙏நன்றி🙏


இப்படிக்கு 

 சி.பா.நாராயணன் மாவட்டத்தலைவர், செங்கல்பட்டு மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம்

🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻














No comments:

Post a Comment