BASIC QUIZ FOR CLASS X
இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட கீழ்க்கண்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
1.மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2. அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும் . அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கெடுப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
3. பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி / Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.
4. ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம்.
5. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து வினாத்தாள் Live ஆக இருக்கும்.
6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் Live ஆக இருப்பதால் , ஒரு மாணவர் எப்போது தொடங்கினாலும் 90 நிமிடத்திற்குள் முடிக்கும்படியாக இருத்தல் வேண்டும்.
7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in செய்தல் , Online refesh செய்தல் போன்ற Technical உதவி மட்டுமே செய்ய வேண்டும் . வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக் கூடாது.
8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள் Hi - Tech Lab Hi - Tech Lab வருவதற்கு முன்னர் இருந்த Computer Lab மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட Laptop.
9. CSR activity மூலம் பெறப்பட்ட கணினிகள் மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடி கணினிகள் அதே வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் கணினிகள் CRC , BRC Hi Tech Lab System / Laptop பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள tab ஆசிரியர்களின் Laptop can be used.
10. இந்த தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை EMIS Team தரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உரிய முறையில் சரி செய்ய வேண்டும் அல்லது உரிய அலுவலகத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
11. இணைய இணைப்பு ( internet ) , மின்சாரம் ஆகியன தடையில்லாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
12. Basic Quiz தேர்வினை http://exams.tnschools.gov.in URL மூலம் நடத்த வேண்டும்.
13. அந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID- ஐ login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . இதற்கு password மாணவர்களின் EMIS ID- ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.
உதாரணமாக - ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில் , அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID , அதில் இறுதியாகவுள்ள 0018 - வுடன் " @ " symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2006 எனில் அந்த மாணவரின் password 0018 @ 2006 ஆகும் .
URL LINK: http://exams.tnschools.gov.in Login ID : 3390xxxx0400018 PWD : 0018 @ 2006
14. Login செய்து உள்நுழைந்தவுடன் தேர்விற்கான வினாத்தாளில் ஒவ்வொரு வினாவாக திரையில் தோன்றும்.
15. மாணவரின் EMIS ID , பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் ( ID Card ) உள்ளது . அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
No comments:
Post a Comment