சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் சுதந்திரப்போர்படையின் படையில் பணியாற்றிய தருமபுரி அன்னசாகரத்தைச்சேர்ந்த சுதந்திர வீர மங்கை திருமதி. சிவகாமி குப்புசாமி அவர்களை ,தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக கெளரவிக்கப்பட்டது. மேலும் அம்மையாரிடம் ஆசியும் வாழ்த்தும் பெறப்பட்டது.
_______________________________________________________
தேசிய ஆசிரியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக சுதந்திர தின விழா மாவட்டத் தலைவர் திருமதி. வைரமணி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன் கொண்டாடப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். மேலும் ஆசிரியர் சரவணகுமார் DC SSA மற்றும் தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தேசத் தலைவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
நமது இந்திய தாய்த் திருநாட்டின் சிறப்புமிக்க 75வது சுந்திர தினவிழா இன்று (15.08.2021) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசியக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இத்தருணத்தில் நமக்கு நம் தாய்த்திருநாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்டெடடுத்து சுதந்திரக் காற்றை நமது சொந்தமாக்கிய நம் முன்னோர்களான, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போற்றி நினைவு கூறப்பட்டது.தமிழ்த்தாய் வாழ்த்து, கொடிப்பாடல், தேசிய கீதம் ஆகியவற்றுடன் நம் தாய்த் திருநாட்டுப் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதியேற்கப்பட்டது. ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.
இடம் : தேசிய ஆசிரியர் சங்க மாநில மகளிர் அணிச் செயலாளர் ஸ்ரீ.சாருமதிதேவி இல்லம்,பழனி.
___________________________________________________________________________________
திண்டுக்கல் மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக 75 ஆவது சுதந்திர தினத்தன்று திண்டுக்கல் விவேகானந்தர் நகரில் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மாநிலத் துணைத் தலைவர் திரு. பா. விஜய் அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment