Tuesday, October 7, 2025

TET தேர்வு : மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

 RTE சட்டம் வருவதற்கு முன் நியமன ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும்

ஜெய்ப்பூர் மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜம் டோலியில் ABRSM (அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு) சார்பில் அக்டோபர் 5,6,7 தேதிகளில் அகில இந்திய கல்வி மாநாடு நடந்தது ராஜஸ்தான் மாநில முதல்வர் மாண்புமிகு பஜன்லால் சர்மா அவர்கள் மாநாட்டை துவங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்கள் மாண்புமிகு துணை முதல்வர்கள் , மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஆசிரியர் சங்கங்களைச்சார்ந்த 4000 நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஆசிரியரே சமுதாயத்திற்கு வழிகாட்டி, அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்குவதில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்கள் , தேச முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் பங்கு ,பல்வேறு மாநிலங்களில் கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 60 பேர் கலந்து கொண்டனர் 

இம்மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி அவர்கள் சமீபபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நாடு முழுவதும் சுமார் 15 இலட்சம் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் ,20-30 ஆண்டுகளுக்கு முன் நியமனம் பெற்ற இவர்கள் TET தேர்வு எழுத நிர்ப்பந்தம் செய்வதால் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி RTE சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பின் பணி நியமனம் பெற்று TET தேர்ச்சி பெறாமல் உள்ளவர்கள் எழுத வேண்டிய TET தேர்வு தவறான புரிதலால் அனைவரும் எழுத வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி NCTE மற்றும் மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது உரிய சட்ட திருத்தம் செய்து RTE சட்டம் அந்தந்த மாநிலங்களில் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் 

தமிழகத்தில் எமிஸ் ,யுடைஸ் பிளஸ் என பல்வேறு புள்ளிவிபரங்கள் பதிவேற்றவே ஆசிரியர்கள் நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது இதனால் தமிழகத்தின் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் மேலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30 க்குள் பெற்று அக்டோபரில் அறிவிப்பதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக இடைக்கால அறிக்கை மட்டுமே பெற்றது அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்கிறது எனவும் தெரிவித்தார் இதை பாரதப் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அகில இந்திய அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் TET பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 4000 ஆசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.





Sunday, October 5, 2025

பருவ மழையை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!!!

 CLICK HERE TO DOWNLOAD 

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன!!!

இதுதொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். இந்த அறிக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

இதுதவிர, தரநிலை அறிக்கையில் மாணவர்களின் அடிப்படை விவரங்களை நிரப்பி, அவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் மொத்த வேலை நாட்கள், மாணவர் பள்ளிக்கு வந்த நாட்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும். திறன் அடிப்படையிலான பகுதிகள், மொழித் திறன்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் திறன்களில் குழந்தையின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல, கல்வி இணைச் செயல்பாடுகள், விளையாட்டு பங்கேற்பு, குழுப்பணி, படைப்பாற்றல் போன்ற பகுதிகளில் குழந்தையின் ஈடுபாட்டை கருத்தில் கொண்டு, அதற்கான தரநிலையை பதிவுசெய்ய வேண்டும். மேலும், அதில் ஆசிரியர் குறிப்பு, பெற்றோரின் கருத்துப் பதிவு, கையொப்பம் போன்ற பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. மதிப்பெண் அட்டையை பெற்றதும் பெற்றோர் தங்கள் கருத்துகளை எழுத ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, September 30, 2025

Sunday, September 28, 2025

ஜெய்ப்பூர் - முக்கிய சுற்றுலா தலங்களின் தொகுப்பு!!!

  • ஹவா மஹால் (காற்றின் அரண்மனை): 
    1799 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சின்னமான அரண்மனை, தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய கட்டிடக்கலை அற்புதம் ஆகும்.
  • ஆம்பர் கோட்டை: 
    மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோட்டை, அதன் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனைகளுக்குப் பெயர் பெற்றது.
  • அய்ராபாக் அரண்மனை: 
    இது ஜெய்ப்பூரின் மற்றொரு முக்கிய சுற்றுலாத் தலமாகும், இது அரச வரலாற்றையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துகிறது.
  • சிட்டி பேலஸ்: 
    ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிட்டி பேலஸ், வளமான வரலாறு மற்றும் அரச பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
  • ஜல் மஹால்: 
    ஏரியின் நடுவில் அமைந்துள்ள இந்த அரண்மனை, மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாகும்.
  • நஹர்கர் கோட்டை: 
    இது ஜெய்ப்பூர் நகரத்திற்கு ஒரு அற்புதமான பின்னணியை அளிக்கிறது, அத்துடன் கோட்டையின் உச்சியிலிருந்து நகரத்தின் அழகிய காட்சியை கண்டு ரசிக்கலாம். 



புதுடெல்லி - முக்கிய சுற்றுலா தலங்களின் தொகுப்பு!!!

  1.   இந்தியா கோட்
  2. குடியரசுத் தலைவர் மாளிகை
  3. குதுப் மினார்
  4. செங்கோட்டை 
  5. ஹூமாயூன் டூம்ப்
  6. பிர்லா மந்தீர்
  7. லோடி தோட்டம்
  8. ஜந்தர் மந்தர்
  9. சாந்தி ஸ்டூபா
  10.  சிரி கோட்டை
  11. லொட்டஸ் டெம்பிள்
  12. அக்‌ஷ்ர்தாம் டெம்பிள்
  13. ராஜ் காட்
  14. ஜும்மா மஸூதி
  15. ஸ்ரீ திகம்பர ஜையின் லால்  மந்திர்




Friday, September 26, 2025

TET CASE UPDATE!!!

 ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு review உச்ச நீதிமன்ற வழக்கு 

UP மாநில அரசு

Diary No 53434/2025 மூன்று IA File செய்துள்ளது .

சீராய்வு மனுவை அனுமதிக்கவும் , விசாரணைக்கு எடுத்து கொள்வதற்க்கும் , நீதிமன்ற சான்று பெற்ற 1. 9.2025 நீதிமன்ற ஆணை சமர்பிக்க விலக்கு கோரியும் மனு செய்துள்ளது.

* புதிதாக ஒரு வழக்கு File செய்யப்பட்டுள்ளது . IA 247739/2025 இன்று File செய்யப்பட்டுள்ளது . விசாரணைக்கு வரும் போது கூடுதல் தகவல் தெரிய கூடும் .


* ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் . வழக்கு எண் வழங்கப்பட்டால் கூடுதல் தகவல் தெரிய கூடும்.

நீதிமன்ற ஆணையின் படி காலாண்டு /அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு - நாள்:19.12.2024!!!

 DOWNLOAD 

Tuesday, September 23, 2025

விழுப்புரம் மாவட்ட செய்திகள்!!!



ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற 
 சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பினை
ரத்து செய்ய வேண்டியும், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படாவண்ணம் காத்திட வேண்டியும்மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டி,  விழுப்புரம் மாவட்ட- DRO Sir- வழியாக, ஆசிரியர்களின்கோரிக்கை மனுவை ,பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது!
 தேசிய ஆசிரியர் சங்கம், விழுப்புரம் மாவட்டம்!

சிவகங்கை மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் சார்பாக நமது பாரத நாட்டின் மிகப்பெரிய ஆசிரியர் அமைப்பான ABRSM ன் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் 800 மாவட்டங்களில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பு விவகாரத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பணிபுரியும் ஆசிரியர்களை கண்ணியமாக நடத்தவும் சீரிய வழியை காட்ட வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழியாக பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மூலமாக மனு அளிக்கப்பட்டது.



6 - 9 ஆம் வகுப்பு - THIRAN - காலாண்டுத் தேர்வு மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) சார்ந்த வழிகாட்டுதல்கள் வெளியீடு!!!

 


திறன் இயக்கம் 2025


6 - 9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள்

👉 காலாண்டு தேர்வு மதிப்பெண்களை செப்டம்பர் மாதத்தின் மதிப்பீடாக கொண்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 வழக்கமான நடைமுறையின் படி திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 திறன் இயக்கத்தில் பயிற்றுவிக்கும் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 காலாண்டு தேர்வில் திறன் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 6 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 60க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 8 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 100 க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின்பு மாணவர்களின் Report Card ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

👉 மதிப்பெண்களை உள்ளீட்டை ( MARK ENTRY ) 22.09.2025 திங்கட்கிழமை முதல் 10.10.2025 வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ள வேண்டும்

PASSPORT UPDATE!!!