Tuesday, October 7, 2025

TET தேர்வு : மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

 RTE சட்டம் வருவதற்கு முன் நியமன ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும்

ஜெய்ப்பூர் மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜம் டோலியில் ABRSM (அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு) சார்பில் அக்டோபர் 5,6,7 தேதிகளில் அகில இந்திய கல்வி மாநாடு நடந்தது ராஜஸ்தான் மாநில முதல்வர் மாண்புமிகு பஜன்லால் சர்மா அவர்கள் மாநாட்டை துவங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்கள் மாண்புமிகு துணை முதல்வர்கள் , மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஆசிரியர் சங்கங்களைச்சார்ந்த 4000 நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ஆசிரியரே சமுதாயத்திற்கு வழிகாட்டி, அனைவருக்கும் தரமான சமமான கல்வி வழங்குவதில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்கள் , தேச முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் பங்கு ,பல்வேறு மாநிலங்களில் கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 60 பேர் கலந்து கொண்டனர் 

இம்மாநாட்டில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில பொதுச் செயலாளர் திரு மு.கந்தசாமி அவர்கள் சமீபபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நாடு முழுவதும் சுமார் 15 இலட்சம் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் ,20-30 ஆண்டுகளுக்கு முன் நியமனம் பெற்ற இவர்கள் TET தேர்வு எழுத நிர்ப்பந்தம் செய்வதால் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி RTE சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பின் பணி நியமனம் பெற்று TET தேர்ச்சி பெறாமல் உள்ளவர்கள் எழுத வேண்டிய TET தேர்வு தவறான புரிதலால் அனைவரும் எழுத வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி NCTE மற்றும் மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது உரிய சட்ட திருத்தம் செய்து RTE சட்டம் அந்தந்த மாநிலங்களில் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் 

தமிழகத்தில் எமிஸ் ,யுடைஸ் பிளஸ் என பல்வேறு புள்ளிவிபரங்கள் பதிவேற்றவே ஆசிரியர்கள் நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது இதனால் தமிழகத்தின் கல்வித்தரம் பாதிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் மேலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30 க்குள் பெற்று அக்டோபரில் அறிவிப்பதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக இடைக்கால அறிக்கை மட்டுமே பெற்றது அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்கிறது எனவும் தெரிவித்தார் இதை பாரதப் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அகில இந்திய அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் TET பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 4000 ஆசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment