இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு, இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் கடமை உணர்வு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் திருமதி காயத்ரி வரவேற்புரை வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு திரிலோகசந்திரன் அவர்கள் தலைமை வகிக்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு வேணுகோபால் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பொதுச்செயலாளர் திரு சரவணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை திருமதி லதா அவர்கள் முன்னிலை வகித்தார்.சுமார் 50 ஆசிரியர்கள் கொண்ட இந்நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் திரு நீலமேகன், திருவள்ளூர், திருப்பந்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு இலட்சுமிபதி, திருவண்ணாமலை மொரப்பந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு அன்பு அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





No comments:
Post a Comment