Wednesday, January 7, 2026

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 7.1.26 புதன் தேசிய ஆசிரியர் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக நமது அமைப்பின் 2026 ஆண்டின் நாள்காட்டினை மதிப்புமிகு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு தயாளன் வசம் வழங்கப்பட்டு ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது,அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு .செந்தில் குமார், மதுரை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி)திரு .சிவக்குமார் முதன்மை கல்வி அலுவலர் நேரடி உதவியாளர்கள் (மேல்நிலை ) திரு.ஜவகர்,மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரடி உதவியாளர் (இடைநிலை) திரு .அமல்ராஜ், கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர்கள் (D.I)திரு கண்ணன் (மேலூர்) திருமதி. இந்திரா (மதுரை) திரு ஜெயக்குமார் (முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம்) ,மதுரை மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திரு.முனியாண்டி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர்கள், மதுரை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் கண்காணிப்பாளர் & அலுவலக பணியாளர்கள்,மதுரை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மேலும் தோழமைச் சங்க நிர்வாகிகள் வசம் வழங்கப்பட்டு ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட தருணம். மேலும் நேற்றும் இன்றும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,அருப்புக்கோட்டை நாடார் உறவின் முறை பெண்கள் மேல்நிலைப்பள்ளி.சௌராஷ்டிரா பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,சௌராஷ்டிரா இருபாலர் உயர்நிலைப்பள்ளி,தியாகராசர் நன்முறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி,சேதுபதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மற்றும் உதவி தலைமை ஆசிரியர்களை சந்தித்து நமது சங்கத்தின் நாள்காட்டி வழங்கப்பட்டு ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது மேலும் மேற்கண்ட பள்ளிகளின் நமது உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து நமது அமைப்பின் நாள்காட்டி வழங்கப்பட்டது.மேற்கண்ட நிகழ்வுகளில் மதுரை மாவட்ட தலைவர் திரு பரமசிவம்,செயலாளர் திரு கணேசன்,பொருளாளர் திரு ஆறுமுக கடவுள்,மகளிர் அணி செயலாளர் திருமதி ரத்தினமாலா,மேலும் ஆயுள் கால உறுப்பினர்கள் திரு.செல்லப்பாண்டி மற்றும் திரு ரவி கலந்து கொண்டு அவர்களது வாழ்த்துக்களையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டார்கள்.
























No comments:

Post a Comment